twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15 வயதில் திருமணம்...16 வயதில் நடிகை...யதார்த்த பெண்மணி சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது

    |

    நடிகையாக வரும்போதே மூன்று மாத கைகுழந்தையுடன் நடிக்க வந்தவர், திரையுலகில் தைரியமான யதார்த்த நடிகை என பெயரெடுத்தவர் சௌகார் ஜானகி. 92 வயதாகும் சௌகார் ஜானகிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 70 ஆண்டுகாலம் நடித்துவரும் நடிகை என்கிற பெருமையுடன் கடந்த மாதம் தனது 92 வது வயதில் அடியெடுத்து வைத்தார் சௌகார் ஜானகி.

    ராஜமெளலியை தவிர பாகுபலியை இயக்க சரியான இயக்குநர் பிறக்கவில்லை போல.. கைவிடப்பட்ட பாகுபலி வெப்தொடர்?ராஜமெளலியை தவிர பாகுபலியை இயக்க சரியான இயக்குநர் பிறக்கவில்லை போல.. கைவிடப்பட்ட பாகுபலி வெப்தொடர்?

    தென் மாநில முதல்வர்களுடன் தொடர்ந்த கலைப்பயணம்

    தென் மாநில முதல்வர்களுடன் தொடர்ந்த கலைப்பயணம்

    தமிழ் திரையுலகில் பல்வேறு பாத்திரங்களை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. தமிழகத்தின் 3 முதல்வர்களுடன் கலைப்பயணத்தில் இணைந்தவர் சௌகார் ஜானகி. கருணாநிதி கதை வசனத்தில் குலக்கொழுந்து படத்தில் நடித்துள்ளார். ஜெயலலிதா, எம்ஜிஆருடன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஆந்திர முதல்வர் என்.டி.ஆருடன் நடித்துள்ளார். என்.டி.ஆரின் முதல் கதாநாயகியே சௌகார் ஜானகிதான்.

    தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர்

    தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர்

    தென் இந்தியாவின் அப்போதைய முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் உள்ளிட்ட அனைவருடனும் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. தமிழில் பாவேந்தர் பாரதி தாசன் வசனம் எழுதிய வளையாபதி படத்தில் அவரது வசனத்தை பேசி நடித்துள்ளார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் குமுதம் படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.

    92 வயதிலும் தொடரும் கலைப்பயணம்

    92 வயதிலும் தொடரும் கலைப்பயணம்

    நடிகை சௌகார் ஜானகி கடந்த மாதம் 12 ஆம் தேதி தனது 92 வது பிறந்தநாளை கொண்டாடினார். 1931 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கோதாவரி மாவட்டத்தில் பிறந்த அவர் தனது 15 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராக பணியாற்றினார். அவரது குரலைக்கேட்டு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அவரை திரைப்படத்தில் நடிக்க அணுகியபோது அவரது குடும்பத்தார் மறுத்து அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.

    ஒரே ஆண்டில் குழந்தை, குடும்ப வறுமை

    ஒரே ஆண்டில் குழந்தை, குடும்ப வறுமை

    ஒரே ஆண்டில் குழந்தை, குடும்ப வறுமை கணவரிடம் நிலையைச் சொல்லி அதே தயாரிப்பாளர் வி.என்.ரெட்டி வீட்டு வாசல் கதவை கைக்குழந்தையுடன் தட்டினார் சௌகார் ஜானகி. கைக்குழந்தை, திருமணமாகிவிட்டது, சாத்தியமே இல்லையம்மா என தயாரிப்பாளர் சொல்ல குடும்ப நிலையை கூறியுள்ளார் சௌகார் ஜானகி. தயாரிப்பாளர் அவர் தம்பி எடுக்கும் படத்திற்கு அவரை சிபாரிசு செய்ய நடிகர் என்.டி.ஆர் நடித்த 'சௌகார்' படத்தில் அறிமுகமானார் சௌகார் ஜானகி.

    முதல் படமே என்.டி.ஆருடன்...

    முதல் படமே என்.டி.ஆருடன்...

    சௌகார் படம் 1947 ஆம் ஆண்டு வெளியானது. என்.டி.ஆரின் முதல் ஹீரோயினும் சௌகார் ஜானகிதான். படத்தில் பிரபல ஜாம்பவான்கள் பணியாற்றி இருந்தனர். பிரபல கேமரா மேன் மார்க்கஸ் பாட்லே, பிரபல இயக்குநர் எல்.வி.பிரசாத் உள்ளிட்டோரும் பணியாற்றியிருந்தனர். தமிழில் ஜெமினி நிறுவன படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை வழங்க காரணமாக இருந்தவர் காஸ்ட்யூம் மேனேஜராக இருந்து பின்நாளில் பிரபல நடிகராக மாறிய ஜெமினி கணேசன் தான். அதனால் அவரை எப்போதும் தனது சகோதரர் என அழைக்கிறார் சௌகார் ஜானகி.

    மறக்கமுடியாத படங்கள்-பாத்திரங்கள்

    மறக்கமுடியாத படங்கள்-பாத்திரங்கள்

    சௌகார் ஜானகி தமிழில் நடித்த படங்கள் மிகவும் பிரபலமானவை. வித்தியாசமான பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். குமுதம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், பாபு, புதிய பறவை, எம்ஜிஆருடன் என் கடமை, ஒளிவிளக்கு, ஜெமினியுடன் மாலையிட்ட மங்கை, காவியத்தலைவி, இருகோடுகள் உள்ளிட்ட படங்கள், கே.பாலச்சந்தரின் முதல் படமான நீர்க்குமிழியின் கதாநாயகி, தொடர்ந்து எதிர்நீச்சல், பாமாவிஜயம், ரஜினியின் தாயாராக தில்லு முல்லு, கமலுடன் சிறிய வயதாக இருக்கும்போதே பார்த்தால் பசி தீரூம் உள்ளிட்ட படங்கள் என 70 ஆண்டுகாலம் பேர் சொல்லும் பல படங்களை நடித்துள்ளார்.

    இறைவா உன் மாளிகையில் பாடல்

    இறைவா உன் மாளிகையில் பாடல்

    காவியத்தலைவி என்கிற சொந்தப்படத்தை தயாரித்து இருவேடங்களில் நடித்தார். ஜெமினி கதாநாயகன், பாலச்சந்தர் இயக்கம். சௌகார் ஜானகி ஒளிவிளக்கு படத்தில் நடித்த, பி.சுசிலா பாடிய இறைவா உன் மாளிகையில் பாடல் பின்னர் 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல் நலிவுற்றிருந்தபோது பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா, புன்னகை மன்னன் பூவிழி கண்ணன், பார்த்த ஞாபகம் இல்லையோ, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா, மியாவ் மியாவ் பூனைக்குட்டி, கண்போன போக்கிலே கால் போகலாமா என பிரபலங்களுடன் பிரபல பாடல்களில் நடித்துள்ளார்.

    நடிக்காத வேடமில்லை

    நடிக்காத வேடமில்லை

    அனைத்துவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ள சௌகார் ஜானகி, நகைச்சுவையை மிகச்சாதாரணமாக நடித்துவிடுவார். எதிர்நீச்சல் தொடங்கி, தில்லு முல்லு வரை அவரது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. உயர்ந்த மனிதனில் உயர்ந்த இடத்தின் பெண்மணியாகவும், இரு கோடுகளில் மாவட்ட ஆட்சியராகவும், ஒளிவிளக்கு படத்தில் விதவை பெண்ணாக எம்ஜிஆரால் காப்பாற்றப்படுபவராகவும், படிக்காத மேதையில் அப்பாவி சிவாஜியின் மனைவியாகவும், எதிர்நீச்சலில் மடிசார் கட்டி நடுத்தர குடும்ப பெண்ணாகவும் அவர் நடிக்காத பாத்திரமில்லை எனலாம்.

    சௌகார் ஜானகி பெயர் ஏன் வந்தது

    சௌகார் ஜானகி பெயர் ஏன் வந்தது

    திரையுலகில் இவர் நடிக்க வந்த காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் வி.என்.ஜானகி. இவர் எம்ஜிஆரின் மனைவி. அதனால் ரசிகர்கள் ஜானகி பெயர் குழப்பத்தில் சௌகார் படத்தில் நடித்ததால் சௌகார் ஜானகி என அழைத்தனர். திரையுலகில் தைரியமாக, எதார்த்தமாக இருந்த நடிகைகள் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரே. அதில் சௌகார் ஜானகியும் ஒருவர். அவரது நேர்மையான தைரியமான அணுகுமுறை அனைவரும் இன்றும் பேசுவர். திரையுலகில் தனக்கான காஸ்ட்யூமே சொந்த செலவிலும், கார் பெட்ரோல், உணவு உள்ளிட்டவற்றை சொந்தமாக செலவு செய்த ஒரே நடிகை சௌகார் ஜானகியாகத்தான் இருப்பார்.

    பெறாத விருதுகள் இல்லை

    பெறாத விருதுகள் இல்லை

    தமிழகத்தில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என 3 முதல்வர்களுடன் கலைப்பயணத்தை தொடர்ந்தவர் சௌகார் ஜானகி. அவருக்கு 1968 ஆம் ஆண்டே கலைமாமணி விருது அண்ணா கையால் கிடைத்தது. அதன் பின்னர் இருகோடுகள் படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்றார். தொடர்ந்து கலைமாமணி விருது நந்தி விருது என பல விருதுகளை நடிப்புக்காக பெற்றுள்ளார். திரையுலகின் 100 வது ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அழைத்து கவுரவித்தார்.

    கலைஞர் சொன்ன வார்த்தை ஜப்பான் பொம்மை

    கலைஞர் சொன்ன வார்த்தை ஜப்பான் பொம்மை

    பாரதி தாசன் கதை வசனத்தை பேசுவதை கேட்டு வியந்து கலைஞர் சொன்னது "ஜப்பான் பொம்மை போல இருக்கிறாரே" என்று, "விட்டால் நடிப்பில் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவா" என பாபு பட 100 வது நாள் விழாவில் மேடையில் சிவாஜி சிலாகித்து சொன்னது, ஒளிவிளக்கு 100 வது நாளில் எமர்ஜென்சி லைட் ஒன்றை கொடுத்து எம்ஜிஆர் சொன்ன வார்த்தை "பண்பட்ட நடிகை நீங்கள்". இதை சௌகார் ஜானகி பல இடங்களில் சொல்லி பெருமைப்பட்டுள்ளார்.

    70 ஆண்டு கலைப்பயணம் தொடர்கிறது

    70 ஆண்டுகள் கலைப்பயணத்தை தொடரும் சௌகார் ஜானகி சந்தானத்துடன் பிஸ்கோத்து படத்தில் நடித்துள்ளார். தனது வயதுக்கேற்ற பாத்திரங்களை யார் கொடுத்தாலும் நடிக்க தயாராக உள்ளதாக கூறும் சௌகார் ஜானகி இப்பவும் நடிக்க தயார் என்கிறார். அவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் கிடைத்திருப்பது தாமதமான ஒன்று என்றாலும் சரியான அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது சிறப்பே.

    English summary
    Married at the age of 15 ... Actress at the age of 16 ... Padma Shri award woman Sowcar Janaki
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X