ஃபேவரைட் இயக்குநர் அட்லீ பிறந்த நாள் ஸ்பெஷல்..யாருக்கும் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்!

சென்னை : தமிழ் சினிமாவில் இளம் தலைமுறையினரை கவர்ந்தவர் இயக்குநர் அட்லீ. இவர் இயக்கிய அனைத்துத் திரைப்படங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

செப்டம்பர் 21ந் தேதியான இன்று அட்லீ தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நாளில் அட்லீ பற்றி இதுவரை வெளிவராத சுவாரசியமான தகவலை பார்க்கலாமா?

நிஜ பெயர்

நிஜ பெயர்

இயக்குநர் அட்லியின் உண்மையான பெயர் அருண்குமார். அட்லீ என்பது அவருடைய செல்லப்பெயராம். வீட்டில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அட்லீ என்று தான் அழைப்பார்களாம். சினிமாவிற்குள் நுழைந்ததும், அருண்குமாரைவிட அட்லீ நன்றாக இருந்ததால் அதையே வைத்துக்கொண்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சொந்த ஊர்

சொந்த ஊர்

மதுரையில் பிறந்த அட்லீ, குழந்தை பருவத்திலேயே குடும்பத்துடன் சென்னைக்கு குடியேறியுள்ளனர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்த அட்லீ, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்து முடித்துள்ளார்.

ரஜினியின் ரசிகன்

ரஜினியின் ரசிகன்

சிறுவயதிலிருந்தே திரைப்படங்களின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த அட்லீ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார். விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை முடித்த பிறகு, அட்லீ தனது நண்பர்களுடன் இணைந்து பல குறும்படங்களை இயக்கியுள்ளார். அவரது சில குறும்படங்களான 'முகபுத்தகம்' யூடியூப்பில் மிகவும் பிரபலமானது.

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்

அட்லீ கோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் தளபதி விஜய்யின் நண்பன் போன்ற மிக முக்கியமான படங்களில் இணை இயக்குநராக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.

நண்பேண்டா

நண்பேண்டா

நடிகர் சிவகார்த்திகேயனும் அட்லீயும் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பே நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள். அட்லீ இயக்கிய பல குறும்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றப்போவதாக இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார்.

அழகான மனைவி

அழகான மனைவி

நடிகை கிருஷ்ண பிரியாவை 2014ம் ஆண்டு அட்லீ திருமணம் செய்து கொண்டார். பிரியாவை அவருக்கு எட்டு வருடங்களாகத் தெரியும். பிரியா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களிலும், நான் மகான் அல்ல , சிங்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். எந்த வெளிநாட்டு படப்பிடிப்புக்கு சென்றாலும் அட்லீ பிரியாவை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என நான்கு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் ஷாருக்கான் இருவேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடின உழைப்பாளி

கடின உழைப்பாளி

இன்று 36வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அட்லீக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அட்லீயின் தீவிர ரசிகரான ஒரு இணையவாசி தனது ட்விட்டர் பக்கத்தில், "கடின உழைப்பாளி இயக்குனர் Atlee_dir க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HappyBirthdayAtlee... 4வது பிளாக்பஸ்டருக்காக காத்திருக்கிறேன் தளபதியுடன் #ஜவான் #வாரிசு #HBDAtlee க்கு வாழ்த்துக்கள்." என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X