யுவன்சங்கர் ராஜா முதலில் இசை அமைத்தது எந்த பாடல் தெரியுமா ?
சென்னை : இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா, கோலிவுட்டில் அதிகம் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர். அரவிந்தன் படத்தில் டைட்டில் பாடலுக்கு இசையமைத்து கோலிவுட்டிற்கு அறிமகமானார்.
இதுவரை 125 படங்களுக்கு மேலாக இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். சில படங்களில் இசையமைத்ததுடன், ஓரிரு பாடல்களையும் பாடி உள்ளார். அவ்வாறு அவரது இசை மட்டுமல்ல, குரலும் தமிழ் சினிமா இசை ரசிகர்களிடம் பிரபலம்.

இந்நிலையில் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் சிவா, யுவன்சங்கர் ராஜா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பஞ்சு சார் மற்றும் இளையராஜா சாருடன் பணியாற்றி காலங்களை நினைத்தால் இப்போதும் பெருமையாக உள்ளது.யுவன்சங்கர் ராஜா தனது முதல் பாடலை ஒரே கால்ஷீட்டில் முடித்து விட்டார். முதல் இரண்டு பாடல்களையும் ஒரே நாளில் ரெக்கார்டு செய்து முடித்து விட்டார். அதற்கு பிறகு அதில் எதுவும் திருத்தமோ அல்லது இணைப்போ செய்யப்படவில்லை. ஒரே நாளில் 100 சதவீதம் குரல் ரெக்கார்டிங்கும் முடித்து விட்டார்.

வெறும் 14 வயதில் முதல் பாடலாக அரவிந்தன் படத்தில் இடம்பெற்ற ஈர நிலா பாடலுக்கும், இரண்டாவது பாடலாக அதே படத்தில் இடம்பெற்ற ஆல் தி பெஸ்ட் பாடலுக்கும் இசையமைத்தார் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











