அமெரிக்கா சென்ற தம்பி.. அழுது தீர்த்து ஒரு பக்கத்திற்கு மெயில் அனுப்பிய சூர்யா.. சுவாரசிய தகவல்!
சென்னை: நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் குறித்த சுவாரசிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா. சரவணன் என்ற இயர் பெயரை கொண்ட சூர்யா சினிமாவுக்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் சூர்யா. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

ஜோதிகாவுடன் காதல்
நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவுடன், பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சுவாரசிய தகவல்
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகர் சூர்யாவுக்கு பிருந்தா என்ற சகோதரி உள்ளார். நடிகர் சூர்யாவின் சகோதரர்தான் நடிகர் கார்த்தி என்பது ஊரறிந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

எதற்கெடுத்தாலும் போட்டி
அதாவது நடிகர் சூர்யாவும் கார்த்தியும் சிறுவயதில் சண்டைக் கோழியாக இருப்பார்களாம். எதற்கெடுத்தாலும் போட்டி போடுவதும் சண்டை போடுவதுமாய் இருப்பார்களாம். ஆனால் கார்த்தி மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றபோதுதான் சூர்யா தம்பி மீது தனக்குள்ள பாசத்தை உணர்ந்தாராம்.

அழுது தீர்த்த சூர்யா
தனது தம்பி அமெரிக்கா சென்றதும், அழுதுகொண்டே ஒரு பக்கத்திற்கு மெயில் அனுப்பினாராம். இதேபோல் தான் சினிமாவில் சம்பாதிக்க தொடங்கியதுமே தனது சம்பாத்தியத்தில் நடிகர் கார்த்திக்கு கார் வாங்கியும் பரிசளித்துள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் சிறந்த அண்ணன் தம்பிகளாகவும் இருவரும் வலம் வருகின்றனர். ஆனால் இருவரும் இணைந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இன்று நடிகர் சூர்யா தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் குறித்த சுவாரசிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications










