"ஐயா"வுக்கு பஸ்ல வந்தார்.. இப்ப "சிவனோடு" தனி பிளைட்.. என்னா வளர்ச்சிம்மா நயன்தாரா!

சென்னை: நடிகை நயன்தாரா தனது முதல் படத்திற்காக கேரளாவில் இருந்து எப்படி வந்தார் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மலையாள படங்களில் நடித்த நயன்தாரா, தமிழில் சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடனுடம் இணைந்து நடித்துள்ள நயன்தாரா தற்போது
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

விக்கியுடன் ஓணம்

விக்கியுடன் ஓணம்

அண்மையில் நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அவரது போட்டோக்களால் #Nayanthara என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது.

சென்னை வந்தது எப்படி?

சென்னை வந்தது எப்படி?

ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சொந்த ஊரான கொச்சி சென்றார். இந்நிலையில் நயன்தாரா தமிழில் தனது முதல் படத்தில் நடிக்கும் போது எப்படி கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பேருந்தில்

அரசு பேருந்தில்

அதாவது ஐயா படத்தில் நடிப்பதற்காக தனது அப்பாவை அழைத்துக் கொண்டு அரசு பேருந்தில் வந்தாராம் நடிகை நயன்தாரா. பேருந்தில் கோயம்பேடு வந்து இறங்கிய அவரை பீஆர்ஓ ஜான்சன் ரிசீவ் செய்துள்ளார்.

யூ டியூபர் தகவல்

யூ டியூபர் தகவல்

மேலும் வட பழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் நயன்தாராவையும் அவரது அப்பாவையும் தங்க வைத்தாராம். இந்த தகவலை யூ டியூபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பு

கடின உழைப்பு

முதல் படத்திற்கு அரசுப் பேருந்தில் வந்த நடிகை நயன்தாரா இன்று தனி விமானம் மூலம் பயணிக்கிறார் என்றால், அதற்கு காரணம் அவரது கடின உழைப்பும் அவரது திறமையும் தான் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

பல படிகள்

பல படிகள்

காதல் தோல்வி, செகன்ட் ஹீரோயின், எடுப்படாத கேரக்டர்கள் என பல படிகளை விடாமுயற்சியுடன் தாண்டி வந்துள்ளார் நயன்தாரா. தனக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாரா, கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.

முன்னோடி

முன்னோடி

சினிமா அல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்து இன்று உச்ச நடிகையாக உயர்ந்துள்ள நயன்தாரா, தமிழ் சினிமாவில் நெபோட்டிசம் உள்ளது, திறமைக்கு மதிப்பில்லை என்று கூறும் நடிகைகளுக்கு முன்னுதாரணமாகவும், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் நடிகைகளுக்கு முன்னோடியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X