தர்பார் படம் எப்போ ரிலீஸ்? ரஜினியே சொல்லியிருக்கார்! சுவாரசிய தகவல்களுடன் இதோ இன்றைய டாப் பீட்ஸ் 5!

சென்னை: இன்றைய டாப் பீட்ஸ் 5ல் தர்பார் படம் குறித்த பல்வேறு தகவல்களை கொண்டு வந்துள்ளார் பிகே.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் தர்பார். இந்தப்படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை வந்த ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னையில் ஏரிகளை தனது ரசிகர்கள் தூர்வாருவது சந்தோஷமாக இருக்கிறது என்றார். மேலும் தர்பார் படம் ரிலீஸ் குறித்தும் அவர் கூறினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் என்ன பேசினார் என்பது குறித்தும் தர்பார் படம் குறித்தும் பல்வேறு முக்கிய தகவல்களை கொண்டுவந்துள்ளார் பிகே. இதேபோல் ஏஆர் ரஹ்மான், பிகில் படம், நடிகர்கள் தனுஷ், சந்தானம் குறித்தும் சுவாரசிய தகவல்கள் இன்றைய பீட்ஸ் 5 வீடியோவில்!
Comments


Click it and Unblock the Notifications