ரஜினிக்கு செக் வைத்த சென்சார் போர்டு.. அடித்து தூக்கிய ரஜினி.. பிரபலம் சொன்ன சுவாரசியத் தகவல்!
சென்னை: ரஜினி படத்தை தடை செய்ய சென்சார் போர்டு போட்ட பிளான் குறித்து செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. படம் வெளியாகி இரண்டாவது வாரத்தில் 525 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயிலர் வசூல்: மேலும் படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, ரஜினி, நெல்சன், அனிருத் என மூன்று பேருக்கும் கலாநிதி மாறன் சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சினிமா விமர்சகரான செய்யாறு பாலு, தனது யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் வசூலை அள்ளி நான் தான் டாப்பு என்பதை நிரூபித்துள்ளார். ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பு இருந்த அத்தனை சர்ச்சைக்கும் வசூலின் மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
சுவாரசியமான சர்ச்சை: இன்றைய 2கே கிட்ஸ்களும் ஜெயிலர் படத்தைப் பார்த்துவிட்டு அவரின் தீவிர ரசிகர்களாகி இருப்பதால் ரஜினிகாந்த் நடித்த நான் மகன் அல்ல திரைப்படம் வெளியாவதற்கு முன்பு நடந்த சுவாரசியமான சர்ச்சை குறித்து இந்த வீடியோவில் பார்ப்போம் என்றார்.
நான் காந்தி அல்ல: அதில், டிராபிக் ராமசாமி போல 80களில் சைதாப்பேட்டை கோபாலன் என்று ஒருத்தர் இருந்தார். இவர் எங்கு அநீதி நடந்தாலும் முதல் ஆளாகி சென்று, அதை தடுத்து வழக்குப்போடுவது இவரின் வேலையாக வைத்திருந்தார்.இந்த நேரத்தில் ரஜினி நடித்த நான் காந்தி அல்ல என்கிற தலைப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த தலைப்பை வைக்கக்கூடாது என்று சைதாப்பேட்டை கோபாலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்சார் போர்டு வைத்த செக்: இதையடுத்து,நான் காந்தி அல்ல படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் சென்சார் போர்டுக்கு சென்றது. அந்த படத்தின் ஒரு காட்சியில் ரஜினி, காவல்நிலையத்திற்கு சென்று ஒரு குற்றவாளியை கத்தியால் குத்துகிறார் . அந்த ரத்தம் சிதறி அங்கு இருக்கும் காந்தியின் போட்டோ மீது படுகிறது. இந்த காட்சியைப் பார்த்து மிரண்டு போனது சென்சார் போர்டு.
இந்த காட்சி காந்தியை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதால், இந்த படத்தை தடை செய்ய முயற்சி செய்கிறது.இதையடுத்து படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டு, படத்தின் பெயர் நான் மகான் அல்ல என மாற்றப்பட்டு படம் வெளியாகி படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது என்று செய்யாறு பாலு சுவாரசியமான விஷயத்தை அந்த வீடியோவில் பகிர்ந்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











