இயக்குநர் பாலாவின் மனைவி கோடீஸ்வரியா?.. வெளியான பின்னணி தகவல்!
சென்னை : பிரபல இயக்குநர் பாலாவின் மனைவி குறித்து பல தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. அவர் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய அளவில் தமிழ் சினிமாவுக்கு பெயரை தேடித் தந்தார்.
பாலாவின் படங்கள் எப்போதும் வித்தியாசமானதாகவே இவருக்கும் பிதாமகன், நந்தா, நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற திரைப்படத்தை பார்ப்பதற்கே மனதிற்கு மிகக்பெரிய தைரியம் தேவைப்படும். அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் மனதை கலங்கவைக்கும்.

பாலா சிறந்த இயக்குனர்
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 6 முறையும், 13 முறை மாநில விருதை பெற்றுள்ளார். உறவுக்கார பெண்ணான முத்துமலரை கடந்த 2004ம் ஆண்டு பாலா திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.

கோபக்காரர்
பாலாவின் படத்தைப் போலவே அவரின் சுபாவமும் இருக்குமாம், பல நடிகர், நடிகைகளே இவர் படத்தில் நடிப்பதற்கு பயந்ததும் உண்டு. பரதேசி திரைப்படத்தில் தேயிலைத் தோட்ட காட்சியில் சரியாக காட்சி வரவில்லை என்ற கோபத்தில் தன்ஷிகாவை உண்மையாகவே கம்பை எடுத்து அடித்து விட்டாராம் இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கருத்து வேறுபாடு
எப்போதும் எதையாவது யோசித்துக்கொண்டே அமைதியாகவே இருப்பாராம், மனைவியிடமோ குழந்தைகளிடமோ அதிகமாக பேசமாட்டாராம். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு , அவ்வப்போது சண்டையும் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருவரும் பிரிந்து விட்டனர். கடந்த மார்ச் 5ந் தேதி தான் இருவரும் சட்டபூர்வமான விவாகரத்து கிடைத்துள்ளது.

கோடீஸ்வரி
தற்போது, பாலாவின் மனைவி முத்துமலர் குடும்பம் குறித்த பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் கோடீஸ்வரரின் மகள் என்பதும், பிறந்ததில் இருந்தே சொகுசுவாழ்க்கை வாழ்ந்துள்ளார். வீட்டிற்கே செல்லப்பிள்ளையாகவும் வளர்ந்துள்ளார். ஆனால், மனைவி முத்துமலரிடம் பாலா கடுமையாகவே கடந்து கொண்டுள்ளார். இதனால் தான் மனம் நொந்துபோன முத்துமலர் விவகாரத்து பெற்றுள்ளார் என்று தகவல்கள் சினிமா வட்டத்தில் வெளியாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











