கமல் சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்..அட இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கதை இருக்கா?

சென்னை : நடிகர் கமல்ஹாசன் சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் குறித்த சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

விக்ரம்

விக்ரம்

கடந்த மாதம் ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் படத்தின் வசூல் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் அதிக வசூலைக் கண்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் இதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளது.

மகிழ்ச்சியில் கமல்

மகிழ்ச்சியில் கமல்

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் இதுபோல ஒரு வெற்றியை காணாத கமலஹாசன் விக்ரம் வெற்றியால் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜுக்கு புதிய சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார். அதே போல, விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கும் புதிய பைக்கை பரிசாக அளித்தார்.

புதிய வாட்ச் இல்லை

புதிய வாட்ச் இல்லை

மேலும், சூரியாவுக்கு, Rolex கை கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார் கமல். Rolex Day - Date Wrist Watch 128238A K18 என்ற அந்த மாடல் வாச்சின் விலை 42 லட்சமாகும். சூர்யாவிற்கு கமல் கொடுத்த rolex வாட்ச் புதிய வாட்ச் இல்லை என்றும், கமல் சார் ரொம்ப வருசமாக அதை வைத்து இருக்கிறார் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தார்.

Recommended Video

Rocketary | Madhavan-னை மனம் திறந்து பாராட்டிய Rajini *Kollywood | Filmibeat Tamil
ரோலக்ஸ் வாட்ச் சுவாரசியம்

ரோலக்ஸ் வாட்ச் சுவாரசியம்

இந்நிலையில், அந்த ரோலக்ஸ் வாட்ச் குறித்த சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இந்த வாட்சை கமல் அணிந்து இருக்கிறார். மதன் கதாபாத்திரத்தில் நடித்த கமல், இந்த வாட்சை அணிந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X