ரூ.4000 கோடி சொத்து வேண்டாம்… விஜய் தேவரகொண்டாவின் பாசத்தில் விழுந்த சமந்தா..பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: விஜய் தேவரகொண்டாவின் பாசத்தில் நடிகை சமந்தா விழுந்துவிட்டதாக பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய்தேவரகொண்டா. தெலுங்கில் நடித்த அர்ஜுன் ரெட்டி மூலம் பெண்களின் கனவு நாயகனாக மாறினார்.

அண்மையில் இவர் குஷி படத்தில் சமந்தாவுடன் நெருக்கமாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர்களின் கெமிஸ்டிரி பக்காவாக இருந்தது.

Interesting information about Vijay Deverakonda Samantha love told by Cheyyaru Balu

விஜய்தேவரகொண்டா: குஷி பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய்தேவரகொண்டா தனது திருமணம், காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் ஆணும், பெண்ணும் கை கோர்த்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த கை யாருடையதாக இருக்கும் என ரசிகர்கள் ஆராய்ச்சியே நடத்திவிட்டார்கள்.

நடிகை சமந்தா: இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள செய்யாறு பாலு,எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்குள் நுழைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான குடும்பத்தின் மருமகளானார். ஆனால், நாகசைத்தன்யாவுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்.

Interesting information about Vijay Deverakonda Samantha love told by Cheyyaru Balu

சொத்து வேண்டாம்: விவகாரத்தின் போது, நாகசைத்தன்யா ஜீவனாம்சம் எத்தனை கோடி வேண்டும் என்று , கேட்க உன் காசு எதுவுமே எனக்கு தேவையில்லை என்று தூக்கிப்போட்டுவிட்டு வந்தார். ரூ 4000 கோடி சொந்தக்காரரான நாகசைத்தன்யாவின் சொத்து வேண்டாம் என்று தூக்கிப்போட்டார். இந்த நிகழ்வுக்கு பிறகு தான் சமந்தாவிற்கு முன்பைவிட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ரசிகர்களுக்கு பிடிக்கும்: இந்த விஷயம் தான் விஜய்தேவரகொண்டாவின் மனதில் சமந்தா இடம் பிடிப்பதற்கு காரணமாக இருக்கலாம். எனக்கு தெரிந்து அந்த கை சமந்தாவின் கையாகத்தான் இருக்கும். இருவரும் திருமணம் செய்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி. ராஷ்மிகாவும், விஜய்தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்போது ராஷ்மிகா மிகவும் பிஸியான நடிகையாக இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு, இல்லை என்பதால், சமந்தா விஜய் தேவரகொண்டா இணைந்தால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X