twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறுதி சுற்றுவரை செல்வோம்..கோப்பையை வெல்வோம் என எதிர்பார்க்கல. .83 படம் உண்மை சம்பவம்!

    |

    சென்னை : உலகக் கோப்பையை நாம்பெற்ற போது நிகழ்ந்த பல ஆச்சரியமான சம்பவங்களையும் உண்மை நிகழ்வுகளையும் 83 திரைப்படம் விவரிக்கிறது.'

    Recommended Video

    Kamal Hassan Adviced Ranveer | 83 First Look | Kamal Hassan Speech

    முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் அவர்களின் வாழ்க்கை பின்னணியில் நம் அணி உலகக்கோப்பையை வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 83.

     Interesting information in ‘83‘ film

    உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜூன் 20ஆம் தேதி வரை என்றும், அரை இறுதிச் சுற்று 22ஆம் தேதி எனவும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதற்கான டிக்கெட்டுகள் இந்தத் தேதிகளுக்கு முன்னதாகவே பதிவு செய்யப்பட்டிருந்தன.

     Interesting information in ‘83‘ film

    போட்டிகளில் விளையாடிவிட்டு ஜூன் 20ஆம் தேதி இரவு நியூயார்க் செல்ல இந்திய அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் டிக்கெட் பதிவு செய்திருந்தனர். அப்போதுதான் திருமண பந்தத்தில் நுழைந்த இவர்களில் சிலர் தங்கள் மனைவிகளுடன் இந்த வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர்.

    இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுவரை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் இந்திய அணியினரே இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெகு சிறப்பாக விளையாடியதுடன், கிரிக்கெட் சரித்திரத்திலும் இடம் பெற்று விட்டது.

     Interesting information in ‘83‘ film

    1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு, விளையாட்டுக்கான உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு இடமே இல்லை என்ற நிலைதான் காணப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாரா வகையில் இந்தியா வெகு சிறப்பாக விளையாடி, உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடித்தது.

    அணித் தலைவர் கபில் தேவ்வை அணியில் உள்ளவர்கள் செல்லமாக கபில் டெவில் என்று அழைத்ததையும், இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற அனுபவத்தையும் வெண்திரையில் வெளியாகும் '83' திரைப்படத்தில் கண்டு மகிழலாம்.

     Interesting information in ‘83‘ film

    கபீர்கான் பிலிம்ஸ் தயாரிக்கும்'83' திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் இணைந்து வழங்குகிறது. தீபிகா படுகோன், கபீர் கான், விஷ்ணுவர்தன் இந்தூரி, சஜீத் நாடியாவாலா, ஃபாண்டம் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் 83 பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.

    இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் '83' திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் பி.வி.ஆர். நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. விளையாட்டை விறுவிறுப்பான திரைக்காவியமாக்கியிருக்கும் '83' படத்தை காணத் தயாராக இருங்கள்.

    English summary
    Interesting information in ‘83‘ film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X