3 நடிகைகள் என்னை ஒருதலையாக காதலித்தார்கள்.. சீக்ரெட் காதல் குறித்து மனம் திறந்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை : நடிகைச்சுவை நடிகரான பயில்வான் ரங்கநாதன், தன்னை 3 நடிகைகள் துரத்தி துரத்தி ஒருதலையாக காதலித்ததாக தெரிவித்துள்ளார்.
பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பயில்வான் ரங்கநாதன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ளார்.
பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வெட்டவெளியில் படு மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

வசமாக சிக்கிய பயில்வான்
இந்நிலையில் நடிகை ஷகிலா பயில்வான் ரங்கநாதனை பேட்டி எடுத்தார். இதில்,ஷகிலா கேட்ட பல கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பயில்வான் ரங்கநாதன் திக்குமுக்காடி போனார். இதில், அனைத்து நடிகைகள் பற்றி காசிப் பேசுகிறீர்கள், இப்போது என்னை பற்றி ஒரு கிசுகிசு சொல்லுங்க என்று தடால் அடியாக கேட்டார் ஷகிலா. இதற்கு, பயில்வான், இது காசிப் இல்லை நீங்கள் திருநங்கைகளுக்கு பல உதவி செய்து வருகிறீர்கள் என்று நான் கேள்விபட்டேன் என்றார்.

3 நடிகைகள் காதலித்தார்கள்
இதில், தனது காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த பயில்வான் ரங்கநாதன், மூன்று நடிகைகள் என்னை ஒருதலையாக காதலித்தார்கள். என்னை திருமணம் செய்து கொள்ள நினைத்தார்கள். ஆனால், என் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு காரணம் எங்கள் குடும்பம் ஆச்சாரமான குடும்பம் என்பதால், என் 32வது வயதில் பெற்றோர் பார்த்துவைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்றார். நான் மட்டும் நடிகையை திருமணம் செய்திருந்தால் என் பெற்றோரை இழந்து இருப்பேன், சமூதாயத்தில் எனக்கு சரியான அங்கிகாரம் கிடைத்து இருக்காது. இன்று எனக்கு சமூதாயத்தில் மரியாதை இருக்கு என்றார்.

நடிகைகள் பப்ளிக் ப்ராப்பர்ட்டி
ஒரு நடிகை நடிக்க வந்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா, நீங்கள் பேசும் பல நடிகைகள் இப்போது சினிமாவை விட்டு விலகி குழந்தை, குடும்பம் என வாழ்த்து வருகிறார்கள் அவர்களை பற்றி, இப்போது பேசுவது உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா? என ஷகிலா அதிரடியாக கேள்வி கேட்டார். இதனால், திகைத்துப்போன பயில்வான், குற்றம் என்று சொல்லவில்லை. பிரபலமாக இருப்பவர்கள் நீங்கள் நினைப்பது மாதிரி இல்லை. அவர்களின் உண்மை முகம் இது தான் என்பதை தான் நான் சொல்கிறேன் நடிகைகள் பப்ளிக் ப்ராப்பர்ட்டி என்றார்.

அரைகுறையா பேசாதீங்க
தொடர்ந்து அதிரடியாக கேள்விகளை ஷகிலா கேட்டதால், கடுப்பாகிப் போன பயில்வான் ரங்கநாதன், உங்களை ஏன் மலையாளப்படத்தில் நடிக்கவே கூடாது என்று அனைத்து நடிகர்களும் போர்க்கொடி தூக்கி ஒதுக்கி வைத்தார்கள் என்று கேட்டார். என்னை யாரும் மலையாளப்படத்தில் இருந்து ஓடவிடவில்லை இதற்கான ஆதாரத்தை நான் தருகிறேன் , உங்களால் ஆதாரம் தரமுடியுமா எதுவுமே தெரியாமல் பத்திரிக்கைகளை பார்த்து அரைகுறையா பேசாதீங்க என்று சரியான பதிலடி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications