GOAT படப்பிடிப்பு..வெறுப்பின் உச்சத்தில் வெங்கட்பிரபு.. பிஸ்மி சொன்ன சுவாரசிய தகவல்!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் முடிவடைந்துவிடும் என்று வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா இதில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்னேகா, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அர்விந்த் ஆகாஷ், அஜய்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். இப்படத்திற்கான பூஜை அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடைபெற்றது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஜனவரியில் தொடங்குவதாக தகவல் வெளியானது. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் மற்ற நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

 Interesting tidbit from Bismi on shooting thalapathy GOAT

இப்படம் ஜெமினி மேன் படத்தின் காப்பி என்று சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வரும் நிலையில், இத்திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானதை அடுத்து, இரண்டாவது போஸ்டர் புத்தாண்டு அன்று படக்குழு வெளியிட்டது. முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருந்தது. ஒரு பைக்கில் மாறுபட்ட வேடங்களில் அமர்ந்திருக்கும் 2 விஜய், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

23 ஆண்டுகளுக்கு பிறகு: இப்படத்தில் நடிகை சினேகா 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் கடைசியாக 2003 ஆம் ஆண்டு வெளியான வசீகரா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் சினேகா, தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டோம்..அவர் மிகவும் இனிமையான மனிதர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்திந்தது மகிழ்ச்சி என்று பேசி இருந்தார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு: இந்நிலையில் GOAT படம் குறித்து வலைப்பேச்சு தளத்தில் பிஸ்மி சில சுவாரசிய தகவல்களை பேசி உள்ளார். அதில், GOAT படத்தின் படப்பிடிப்பு சென்னை கோவளத்தில் நடைபெற்று வருகிறது. கோவளத்தில் இரண்டு பங்களாவை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ஜனவவரி 23ந் தேதி வரை கோவளத்தில் படப்பிடிப்பை நடத்தி விட்டு பின் பிப்ரவரி முதல் வாரத்தில் ராஜஸ்தானில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். முதலில் இலங்கைக்கு தான் படப்பிடிப்பு செல்வதாக இருந்தது. ஆனால், தற்போது அங்கு பனிப்பொழிவு இருப்பதால், ராஜஸ்தானுக்கு செல்கின்றனர். அதன்பின் இலங்கையில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, கடைசி கட்ட படப்பிடிப்பாக இஸ்தான்புல் செல்கின்றனர். மார்ச்சுடன் GOAT படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. ஒரு வேலை சில காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தால் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்றார் பிஸ்மி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X