விசுவாசம் பற்றி முக்கிய அப்டேட் வந்திருக்கு, ஆனால்...
Recommended Video

சென்னை: விசுவாசம் ஹாரர் படமா இல்லையா என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அஜீத், சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விசுவாசம். வழக்கமாக தலைப்பை சொல்லாமல் இழுத்தடிக்கும் சிவா இம்முறை யாரும் கேட்பதற்கு முன்பே தலைப்பை வைத்துவிட்டார்.
படப்பிடிப்பு தான் எப்பொழுது துவங்கும் என்று அறிவிக்க மறுக்கிறார்.

ஜனவரி
விசுவாசம் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கும் என்றார்கள், பின்னர் பிப்ரவரி என்றார்கள். மார்ச் 2வது வாரம் என்றார்கள். தற்போதோ மார்ச் இறுதி வாரம் ஹைதராபாத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

கவலை
விசுவாசம் படம் கைவிடப்பட்டதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.

இல்லை
விசுவாசம் ஹாரர் படம் என்ற பேச்சு கிளம்பியது. விசுவாசம் ஹாரர் எல்லாம் இல்லை கமர்ஷியல் பொழுதுபோக்கு தான் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம்
படம் குறித்து தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளதால் படம் டிராப் ஆகவில்லை என்று அஜீத் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விசுவாசம் படப்பிடிப்பு துவங்கும் நாளை தல ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











