சர்வதேச ஆவணப்பட விழா…குறும்பட இயக்குநர்களுக்கான அறிய வாய்ப்பு

சென்னை: சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்காக ஆண்டு தோறும் சர்வதேச ஆவணப்பட விழா நடத்தப்படும். இந்த ஆண்டு நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடத்தப்படவிருக்கிறது. இதற்காக 2018-19ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குறும்படங்களை அனுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளது.

எத்தனையோ திறமையான இளைஞர்கள் சினிமாவில் நுழைவுதற்காக வாய்ப்பு தேடி அலைகின்றனர். சிலர் எதற்காகவும் காத்திருக்காமல், தங்களுடைய திறமையை பரிசோதிப்பதற்காக, குறும்படங்களை எடுத்து அவற்றை யூடியூம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

International Documentary Film Festival will be held at Amsterdam

குறும்படங்களை எடுக்கும் அனைவருமே வெற்றி பெறுவதில்லை. சிலர் மட்டுமே வெற்றி பெற்று சினிமாவில் சாதிக்கின்றனர். பெரும்பாலானவர்கள், காணாமல் போய்விடுகின்றனர். அவ்வாறான இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கவே ஆண்டு தோறும் சர்வதேச ஆவணப்பட விழா நடத்தப்படுகிறது.

அதே போல் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆவணப்பட விழா வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம்தேதி வரை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபெறவிருக்கிறது. அவ்விழாவில் திரையிடப்படவேண்டிய குறும்படங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.

20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் சர்வதேச ஆவணப்பட விழாவில் திரையிட, உலகெங்கிலும் தயாரிக்கப்பட்ட தமிழ் குறும்படங்கள் தேவை.

2018-19ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விதிகள்:
1. குறும்படம் யூடியூப் போன்ற தளங்களில் பகிர்ந்திருக்க கூடாது.
2. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் திரையிட அனுமதி தர வேண்டும்.
3. விழாக்களில் திரையிட பணம் தரப்பட மாட்டாது.
4. 20 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடும் குறும்படங்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். பரிசுத்தொகை கிடையாது.
6. குறும்படங்களை ப்ளூரே, டிவிடி, பெண்ட்ரைவ் மூலம் அனுப்ப வேண்டும். கூகுள் ட்ரைவ், வீ ட்ரான்ஸ்பர் போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் அனுப்பலாம்.
7. நவம்பர் 15ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
8. தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் படங்களின் படைப்பாளிகள் சொந்த செலவில் வந்து போக வேண்டும்.
[தங்குமிடம், உணவு மட்டும் வழங்கப்படும்]

மேலதிகத்தகவல்களுக்கு +919003917667 என்ற எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.

அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்

Read more about: idfa
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X