Don't Miss!
- News
சென்னை அண்ணாசாலையில் நடந்து சென்ற பெண்.. கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..உடல் நசுங்கி உயிரிழப்பு
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Finance
அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தென் கொரியாவின் சர்வதேசத் திரைப்பட விழா..விக்ரம் திரைப்படம் பங்கு பெறுகிறது
விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட், ரசிகர்கள் வரவேற்பைத்தாண்டி தென் கொரிய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
விக்ரம படம், கைதி படத்தின் கருவை இணைத்து கமல் ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட படம் அதன் வித்தியாசமான கதைக்கரு, காட்சிப்படுத்துதளுக்காக பெரிய வெற்றியை அடைந்தது.
இதுவரை இல்லாத அளவுக்கு கமல்ஹாசனே எதிர்பாராத வெற்றியை விக்ரம் பெற்று தந்தது.
துருவ் விக்ரம் ஜோடியாக என் மகளா? இதெல்லாம் ரொம்ப தவறுங்க… விளக்கம் கொடுத்த ஆர்கே செல்வமணி…

36 ஆண்டுகளுக்கு பின் வந்த விக்ரம்
நடிகர் கமல் ஹாசன் 36 ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்த விக்ரம் படம் பெரிய வெற்றியை ஈட்டி தந்தது. கமல்ஹாசன் விக்ரம் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை என்றாலும் இளையவர்களுடன் இணைந்து ஏதாவது செய்யவேண்டும் என்கிற எண்ணத்தை அவரது ரசிகரான லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை மாற்றியது. விக்ரம் படம் தயாரானது. தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் படத்தில் இணைந்தனர்.

முன்னணி இளம் நடிகர்கள், கேன்ஸ் பட விழா
விஜய் சேதுபதி வில்லனாகவும், ஃபஹத் பாசில், சூர்யா என நட்சத்திர பட்டாளமே களமிறங்க படம் முதல் நாளிலிருந்தே வசூலை அள்ளி குவித்தது. கமல்ஹாசன் படத்தின் ப்ரமோஷனுக்கு கேன்ஸ் படவிழாவை பயன்படுத்தினார். முதன்முறையாக என்.எஃப்.டியில் விக்ரம் போஸ்டர் விற்கப்பட்டது. இதி கிரிப்டோ கரன்ஸி, மெடாவெர்ஸ் சம்பந்தப்பட்டது. போஸ்டரை வாங்குபவர்களுக்கு பல சலுகைகள் என தமிழ் திரைப்படத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தும் வேலையை கமல் செய்தார்.

சூட்டோடு சூடாக இந்தியன் 2 படத்தை ஆரம்பித்த கமல்
விக்ரமின் வெற்றி கமலுக்கு மேலும் உத்வேகம் கிடைக்க சூட்டோடு சூடாக இந்தியன் 2 ஆரம்பித்து விட்டார். விகர்ம் பட வெற்றியை தொடர்ந்து பிளாக் மோடு படங்கள், அதே பாணி படங்களும் வெளிவர தொடங்கிய நிலையில் அதற்கு அடுத்த வெர்ஷனாக கைதி 2 படத்தை லோகேஷ் கொண்டுவர உள்ளார். உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது.

சர்வதேச பட விழாவில் விக்ரம்
அக்டோபர் 5 முதல் 14 ஆம் தேதி வரை தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படுகிறது.