twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருவண்ணாமலை உலக திரைப்பட விழா - ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள்

    |

    திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை பெற்ற மலையாள மொழி திரைப்படம் கும்பாலாங்கி நைட்ஸ், ஹங்கேரி நாட்டு படமான கோல்டு வார், சுவீடன் நாட்டு படமான சம்மர் வித் மோனிகா, எகிப்து படமான ஓமிடைன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த திரைப்பட விழாவில், மெக்சிகோ, அமெரிக்கா, தென்கொரியா, ஸ்பெயின், லெபனான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற 22 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    கடந்த ஆண்டுகளில் தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த உலக திரைப்பட விழா முதன்முறையாக திருவண்ணாமலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், 6வது உலகத் திரைப்பட விழா திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் உள்ள திரையரங்கில் 16ஆம் தேதி தொடங்கியது.

    international film festival to in Tiruvannamalai

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கவுரவ தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். திரைப்பட விழாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், கிரிஷ்கர்னாட், மிருணாள்சென் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முதல் நாளன்று பல்வேறு விருதுகளை பெற்ற மலையாள மொழி திரைப்படம் 'கும்பாலாங்கி நைட்ஸ்', ஹங்கேரி நாட்டு படமான 'கோல்டு வார்', சுவீடன் நாட்டு படமான 'சம்மர் வித் மோனிகா', எகிப்து படமான 'ஓமிடைன்' ஆகியவை திரையிடப்பட்டன.

    விழாவில், அறம் திரைப்பட இயக்குநர் கோபி நயினார் பேசும் போது, இந்தியாவில் சினிமா எடுப்பது கஷ்டமான விஷயம். தயாரிப்பாளரிடம் கதை சொல்வதை விட, கதாநாயகனிடம் கதை சொல்வது கஷ்டம். சினிமாவை அரசியல் மற்றும் அறிவியல்படுத்த வேண்டியது அவசியம். சினிமாவை மக்களுக்கு அறிமுகப்படுத்த, இதுபோன்ற திரைப்பட விழாக்கள் பயன்படுகிறது என்றார்.

    சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்!சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்!

    சமூகம் தன் சொந்த விடுதலைக்கான அரசியல் எழுச்சியை கலை வடிவில் தான் பெற முடியும். சினிமாவை அரசியல்படுத்தாமல் நாம் வெற்றிபெற முடியாது. சினிமா மக்கள் சாதனமாக மாற வேண்டும் என்று கூறிய கோபி நயினார், கதாநாயகன் வழிபாட்டில் இருந்து சினிமாவை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நல்ல சினிமாவை அறிமுகப்படுத்த வேண்டியது சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களின் கடமை என்றார்.

    international film festival to in Tiruvannamalai

    20ம் தேதி வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில், மெக்சிகோ, அமெரிக்கா, தென்கொரியா, ஸ்பெயின், லெபனான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சினிமா திரையிடப்பட்டன. மேலும், ஒவ்வொரு படமும் திரையிடல் முடிந்ததும், அது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    English summary
    Screening of 22 international films from 12 countries will be part of the five-day festival The 6th edition of Writers and Artists International Film Festival organised by would be part of the five day festival at Arunachalam Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X