Oscar 2024: ஆஸ்கர் விருது விழாவிற்கு தயாரான அமெரிக்கா.. லாஸ் ஏஞ்சல்சில் குவிந்த திரைப்பிரபலங்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நாளைய தினம் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு துவங்கவுள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் பயணித்துவரும் அனைவருக்கும் ஆஸ்கர் விருது பெறுவது என்பது ஒரு கனவு. இந்தக்கனவு ஒரு சிலருக்கு நனவாகும் நிலையில் அதிகமானோர், இந்தக்கனவை நனவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்த விருதுகளை இந்திய படங்களும் அவ்வப்போது சாத்தியப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்த ஏஆர் ரஹ்மானும் இந்த விருதை பெற்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் ரசிகர்களின் இந்த கனவை சாத்தியப்படுத்தியது. ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படம் அதிகமான ஆஸ்கர் விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

ஆஸ்கர் 2024 விருதுகள்: கடந்த 2023ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெவிலி ஹில்ஸில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி நாளைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளது. கடந்த 1929ம் ஆண்டுமுதல் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த டைரக்டர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. லாஸ் ஏஞ்சல்சின் டொல்பி திரையரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்: இந்த ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டிக்கு தயாராகியுள்ளது. எம்மா ஸ்டோன் நடிப்பில் வெளியான புவர் திங்ஸ் படம் 11 பிரிவுகளிலும் மார்டின் ஸ்கார்சஸே இயக்கத்தில் லியானோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான கில்லர்ஸ் ஆன் தி பிளவர் மூன் என்ற திரைப்படம் 10 பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதுகளின் போட்டிக்கு தேர்வாகியுள்ளன. இவற்றில் எந்தப் படம் அதிகமான ஆஸ்கர் விருதுகளை பெறும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த விழா நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.
லாஸ் ஏஞ்சல்சில் குவிந்த திரைப்பிரபலங்கள்: இந்த நிகழ்ச்சிக்காக தற்போது ஹாலிவுட் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பிரபலங்களும் விழா நடைபெறும் இடத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழா சிறப்பாக நடைபெறவும் விழாவிற்கு சர்வதேச அளவில் இருந்து வந்துள்ள திரைத்துறை பிரபலங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் அதிகமான செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். ஒருபுறம் கோலாகலமாகவும் மறுபுறம் மிகுந்த பாதுகாப்புடனும் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி இயக்குநர்: கடந்த ஆண்டிற்கான இந்த விருதுகள் வழங்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜாவின் To kill a Tiger என்ற ஆவணப்படமும் சிறந்த ஆவணப்பட பிரிவில் இடம்பெற்றுள்ளது. கனடா நாட்டு தயாரிப்பாக உருவாகியுள்ளஇந்த ஆவணப்படத்தில் ஜார்க்கண்டை சேர்ந்த இந்தியா விவசாயிகளின் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த முறை The elephant Whisperers என்ற ஆவணப்படம் விருது வென்ற நிலையில் To kill a Tiger ஆவணப்படம் ஆஸ்கர் வெல்லுமா என்பது நாளைய தினம் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











