மகத்தானவர்கள் செவிலியர்கள்.. கமல் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. செவிலியர்களை வாழ்த்திய பிரபலங்கள்!
சென்னை: கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக சேவை ஆற்றி வரும் செவிலியர்களை உலக செவிலியர் தினமான இன்று போற்றி வருகின்றனர் சினிமா பிரபலங்கள்.
உலக நாயகன் கமல்ஹாசன், மோகன் லால், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அக்ஷய் குமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் செவிலியர்களுக்கு ராயல் சல்யூட் அடித்து ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.
இரவு பகல் பாராது செவிலியர்கள் மக்களை காப்பாற்றுகின்றனர் என்றும் பாராட்டி உள்ளனர்.

மகத்தானவர்கள் செவிலியர்கள்
"இரவு பகல் பாராது, மனம் கோணாது பெருந்தொற்றுக் காலத்தில் சேவை செய்து வரும் செவிலியர்கள் மகத்தானவர்கள். அவர்களின் தன்னலமில்லா சேவைக்கு தலை வணங்குவோம்." என உலக நாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி உள்ளார்.

அக்ஷய் குமார் வாழ்த்து
சமீபத்தில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது என்னை முற்றிலுமாக பாதுகாத்து காப்பாற்றிய சக்தி என்றால் அது நர்ஸ்களின் சக்தி மட்டும் தான். உண்மையான ஹீரோக்களுக்கு இந்த நாளில் நன்றியை மறவாமல் தெரிவிப்போம் என்று ட்வீட் போட்டுள்ளார்.

மோகன்லால் வாழ்த்து
உங்களுடைய அர்பணிப்புக்கும், சேவைக்கும் எப்போதுமே நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம். அனைத்து செவிலியர்களுக்கும் சர்வதேச செவிலியர்கள் தின நல்வாழ்த்துக்கள் என நடிகர் மோகன் லால் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

அமைரா தஸ்தூர் வாழ்த்து
தங்கள் வாழ்க்கையை மக்கள் பணிக்காக துச்சமாக எண்ணி அனு தினமும் உழைத்து வரும் செவிலியர்கள் தான் நம்முடைய பலமே இந்த இக்காட்டான நேரத்தில், அவர்கள் தான் ரியல் சூப்பர் ஹீரோக்கள் என மார்வல் சூப்பர் ஹீரோக்கள் மத்தியில் நர்ஸ் ஒருவர் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்தி உள்ளார் நடிகை அமைரா தஸ்தூர்.

அவங்க தேவதைகள்
இந்த கடினமான நேரத்தில், தங்கள் வாழ்க்கையை அர்பணித்து பெரிய ரிஸ்க் எடுத்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து செவிலியர்களும் தேவதைகள் தான் என்று கூறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பிரபல எழுத்தாளர் வில்லியம் ஆஸ்லர் செவிலியர்கள் குறித்து எழுதிய கவிதை ஒன்றையும் மேற்கோள் காட்டி பாராட்டி உள்ளார். மேலும், ஏகப்பட்ட திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











