சர்வதேச யோகா தினம்.. இன்னாம்மா நம்ம ஹீரோயின்கள் வளைந்து நெளிந்து யோகா செய்றாங்கனு பாருங்க!

சென்னை: சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி முதல் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் யோகா செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

லாக்டவுன் தொடங்கியதில் இருந்தே யோகா, ஒர்க்கவுட் என அசத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங், இஷா குப்தா, டாப்ஸி உள்ளிட்ட நடிகைகள் தங்களின் யோகா போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், யோகா போன்ற உடற்பயிற்சிகளை செய்து ஆரோக்கியமாக இருப்போம்.

உண்மையான யோகா என்பது

உண்மையான யோகா என்பது

ஒர்க்கவுட் செய்வதில் அதி தீவிரமாக இயங்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், சர்வதேச யோகா தினமான இன்று, காலையிலேயே, வில்லாக வளைந்து யோகா செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார். "உண்மையான யோகா என்பது உடலை சரிப்படுத்துவதில்லை, நம் வாழ்க்கையையே சரிப்படுத்துவது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராணி சாட்டர்ஜி

ராணி சாட்டர்ஜி

மராத்தி நடிகையும் மஸ்த்ராம் வெப்சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்து வரும் நடிகை ராணி சாட்டர்ஜி, காலையிலேயே அமர்ந்து, கைகளை தலைக்கு மேல் தூக்கி வணக்கம் போட்டபடி செய்யும் யோகா புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழவும் வாழ்த்தியுள்ளார்.

உபாஸன யோகா

உபாஸன யோகா

தனது அப்பார்ட்மென்ட் பால்கனியில் லேவண்டர் நிற டாப்ஸ் மற்றும் நீல நிற ஸ்போர்ட்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு, உபாஸன யோகா செய்யும் புகைப்படத்தை நடிகை டாப்ஸி பதிவிட்டுள்ளார். தினமும் சில நிமிடங்கள் இப்படி அமர்ந்து யோகா செய்தாலே போதும், உடலும் மனதும் என்றென்றும் ஆரோக்கியமாகவும் சஞ்சலம் இல்லாமலும் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

பறவையை போல

பறவையை போல

டிவி நடிகையும், நிர்வாண யோகா கலைஞருமான நடிகை அபிகைல் பாண்டே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிஜியன் பறவையை போல பறக்கும் யோகா வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். தனது காதலருடன் எப்போதுமே யோகா செய்து அசத்தும் இவர், தற்போது தனியாக யோகா செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Recommended Video

ஆண் நண்பருடன் வேற லெவல் யோகா.. புக் படிக்க உங்களுக்கு வேற இடமே கிடக்கலையா அபிகைல் பாண்டே?
மலைகா அரோரா

மலைகா அரோரா

பாலிவுட்டின் பிரபல நடிகையும் யோகா டீச்சருமான மலைகா அரோரா, கடந்த 14 நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு, தனது மாணவர்களுக்கு யோகா செய்வதின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உபதேசித்து வருகிறார். தற்போது, பரிவர்த்த உட்கத்தாசனா செய்யும் யோகா போஸை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X