தமிழக பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் இன்டர்ஸ்டெல்லர்!

By Shankar

கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் படம் தமிழ்நாட்டில் பெரிய வசூலுடன் சாதனைப் படைத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக ஆரம்ப வசூலைப் பெற்றுள்ள படம் இதுதான் என்ற பெருமை கிடைத்துள்ளது.

Interstellar rocks at TN box office

முதல் வாரம் மட்டும் இந்தப் படம் ரூ 1.40 கோடி வசூலித்துள்ளது. அதுவும் நேரடி ஆங்கிலப் படமாக. இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி ஆங்கிலப் படமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை போன்ற நகரங்களில் வெறும் 20 அரங்குகளில் மட்டுமே இந்தப் படம் வெளியிடப்பட்டது. முதல் வாரத்தில் இந்தப் படம் ரூ 1.40 கோடியை இந்த 20 அரங்குகளிலிருந்தும் பெற்றுள்ளது புதிய சாதனையாகும்.

ஒரு வாரம் முடிந்த பிறகும் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுமாறு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X