உங்களை நம்பித்தான் வந்து இருக்கிறேன்.. லட்சுமி ராமகிருஷ்ணனின் காலில் விழுந்து கதறிய நடிகை!
சென்னை: குணச்சித்திர வேடங்களில் நடித்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பங்கேற்று மிகவும் பிரபலம் அடைந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
பின்னர் 2012ம் ஆண்டு வெளியான ஆரோஹனம் திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் அறிமுகமானார்.

இதைத் தெடர்ந்து இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.
ஆர் யு ஓகே பேபி: இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர் யு ஓகே பேபி திரைப்படம் குழந்தை தத்தெடுப்புக்கு முன்னரும் பின்னரும் ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகள் பற்றி பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் குறித்து பேட்டி அளித்துள்ள அவர், நானும் ஒவ்வொரு படம் கமர்ஷியல் படமாகத்தான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடைசியில் என் மனசுல என்ன தோணுதோ அதைத்தான் நான் செய்வேன். ஆனால், தொடர்ந்து கமர்ஷியல் ஹிட் கொடுக்காமல் படம் எடுப்பது என்பது ரொம்ப கஷ்டம்.
எல்லாருக்கும் கதை பிடித்துவிட்டது: இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, இயக்குநர் உதய் மகேஷ், இயக்குநர் பவுல் மற்றும் நான் உட்பட ஐந்து இயக்குநர்களும் இதில் நடித்து இருக்கிறோம். மிஷ்கினுக்கும் சமுத்திரக்கனிக்கும் இந்த கதையை சொன்னேன் ஆனால், அவர் கதை பிடித்து இருக்கு என்று எங்கே வரனும் என்று சொல்லுங்க என்றார்கள். அதுமட்டுமில்லாமல் அபிராமிக்கூட நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு அது இந்த படத்தில் நிறைவேறி விட்டது.
நிச்சயம் விருது கிடைக்கும்: இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள முல்லை அரசி குறித்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த பெண்ணுக்கிட்ட கதையை கொடுத்ததும் படித்துவிட்டு சிரித்தாள், என்னமா சிரிக்கிற என்றால் மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். ஆனால், கேமராவிற்கு முன் பட்டையை கிளப்பிட்டா, ராஜா சார் இந்த பெண்ணின் நடிப்பை பார்த்துவிட்டு நிச்சயம் இந்த படத்திற்கு விருது கிடைக்கும் என்றார்.
காலில் விழுந்து கதறி அழுத நடிகை: இதையடுத்து,செய்தியாளர் ஆர் யு ஓகே பேபி படத்தில் இருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்ட சொன்னார். உடனே நடிகை முல்லை அரிசி, லட்சுமி ராமகிருஷ்ணனின் காலில் விழுந்து உங்களை நம்பிதான் வந்து இருக்கிறேன் என்று கதறி கதறி அந்த அந்த படத்தின் காட்சியை தத்ரூபமாக நடித்துக்காட்டினார்.


Click it and Unblock the Notifications











