Leo: லியோ நெகட்டிவ் விமர்சனம்.. தலைவர் 171 படப்பிடிப்பு எப்போது.. லோகேஷின் நச் பதில்!
சென்னை: லியோ படத்திற்கு வரும் மோசமான நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ் கனகராஜ் சரியான பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கில் வெளியானது.
செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
தளபதியின் லியோ: ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியான நிலையில் லியோ திரைப்படத்தின் டிக்கெட் அக்டோபர் 24 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. பல இடங்களிலும் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், லியோ படத்தின் கலெக்ஷன் எகிறியுள்ளது.

படையெடுக்கும் மக்கள்: இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சிலர் படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ், குழந்தைகள் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளதால் அனைவரும் விடுமுறை தினத்தை கொண்டாட தியேட்டருக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ் கிங்: முதல் நாளில் உலகளவில் ரூ.148.5 கோடி வசூலை அள்ளிய லியோ திரைப்படம், இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை சற்று சரிவை சந்தித்த நிலையில், விடுமுறை தினமான நேற்று மீண்டும் பிக்கப் ஆகி உலக அளவில் ரூ.305 கோடி வசூலை அள்ளி உள்ளது. இதன் மூலம் விஜய் மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளார்.
லோகேஷ் பேட்டி: இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் செய்தி ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்துள்ளார். அதில், லியோ படம் மக்களுக்கு பிடித்திருந்தால் சந்தோஷம், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. லியோ படத்திற்கு தொடர்ந்து நெகடிவ் விமர்சனம் வந்து கொண்டு இருக்கிறது. மக்கள் என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும் அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைப் பார்த்து அடுத்த படத்திற்கு தயாராக வேண்டும் என்றார்.

தலைவர் 171 படப்பிடிப்பு எப்போது: மேலும் தலைவர் 171 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தெரிவித்தார். இதுவரை லியோ திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்று எனக்கு தெரியாது. இதுகுறித்து இனிமேல் தான் லலித்திடம் பேச வேண்டும் என்று லோகேஷ் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











