ஜோசியத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா? மனசாட்சி இருக்கா இல்லையா? கொந்தளித்த ஜீவா ரவி!
சென்னை: ஜோசியத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்து விட்டார் என்று எப்படி சொல்றீங்க உங்களுக்கு மனசாட்சி இருக்கா இல்லையா என்று மாரிமுத்துவின் நண்பர் ஜீவா ரவி தெரிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் உச்சம்தொட்ட மாரிமுத்து வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல், சென்னை சாலிகிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின், தேனிமாவட்டம் வரசநாடுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்கு நடை பெற்றது.

மாரிமுத்துவின் கனவு வீடு: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த, மாரிமுத்துவின் நெருங்கிய நண்பரான, ஜீவா ரவி, அவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், மாரிமுத்து அவர்கள் வறுமையிலும் இருந்து இருக்கிறார், புகழின் உச்சியிலும் இருந்து இருக்கிறார். அவருடைய கனவு வீடுகட்ட வேண்டும் என்று, அந்த வீட்டில் மனைவிக்கு தனி அறையில் ஏசி போட்டு அவ ஜாலியாக இருக்கணும்னு சொல்லுவார். அதுமட்டுமில்லாமல், அந்த வீட்டில் அவருக்கு என்று ஒரு தனி அறையில், புத்தகம்,பழங்கால பொருட்கள் எல்லாம் வைத்து இருக்கிறேன். வீட்டுக்கு வந்து பாருங்க என்று ஆசை ஆசையா அந்த வீட்டை கட்டினார்.
மனசாட்சி இருக்கா: மேலும், ஜோசியத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்துவிட்டார் என்கிற செய்தியை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் இறந்துவிடுகிறார்களா என்ன. தயவு செய்து இதுபோன்ற தவறான செய்தியை பரப்பாதீர்கள். அவருடைய நேரம் முடிந்துவிட்டது அவர் இறந்துவிட்டார். மாரிமுத்து இறந்த இரண்டாவது நாளில் இருந்தே ஜோசியத்தை பழித்ததால் இறந்தார் என்று சொல்வதற்கு எப்படி மனசு வருகிறது. உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையா? இனிமேல் அப்படி அதைப்பற்றி பேசாதீர்கள்.
மகிழ்ச்சியான வாழ்க்கை: காரு, பணம், பிரம்மாண்ட வீடு, ஆடம்பர வாழ்க்கை எல்லாத்தையும் விட்டு குடும்பம் தான் முக்கியம் என்று ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார். இன்று அவர் இல்லை என்றாலும், குடும்பத்தை எப்படி கட்டி காப்பாற்ற வேண்டும் என்று அவரது மகனுக்கு கற்று கொடுத்திருக்கிறார். அந்த பையன் தைரியமான பையன் நிச்சயமாக குடும்பத்தை காப்பாற்றுவான் என்று மாரிமுத்துவின் நெருங்கிய நண்பரான ஜீவா ரவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











