7G ரெயின்போ காலனி.. ஹீரோவை செருப்பால் அடித்த சோனியா அகர்வால்.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: 7G ரெயின்போ காலனி படப்பிடிப்பில் ஹீரோவை செருப்பால் அடித்த சோனியா அகர்வால்..என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: 7G ரெயின்போ காலனி படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை நடிகர் ரவி கிருஷ்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Interview with Ravi Krishna on the incident on the sets of 7G Rainbow Colony

செல்வராகன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் செட்டி போன்ற பலர் நடித்துள்ளனர்.

இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது.

சூப்பர் ஹிட் பாடல்கள்: 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம் பெற்ற நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் என்ற பாடல், இன்றளவும் காதலர்களுக்கு பிடித்தப் பாடலாக உள்ளது. நா.முத்துக்குமாரின் பாடல் வரியில் யுவன்சங்கர் ராஜாவின் இசையில் அந்த படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தன.

வசூலை அள்ளியது: படம் தொடங்கும் போது விளையாட்டுத் தனமாக இருந்தாலும், கதை செல்ல செல்ல அழுத்தமானதாகவும், காதலை சொல்லும் வகையில் இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி காதல் வயப்பட்டவர்களை மட்டுமில்லாமல், பெற்றோர்களையும் கண்கலங்க வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இப்படம், 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்து வசூலை அள்ளியது.

7ஜி ரெயின்போ காலனி 2: படம் வெளியாகி 19 ஆண்டுகளான நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் நடித்த ஹீரோயின் சோனியா அகர்வால் இரண்டாம் பாகத்தில் இல்லை. இதனால் கதாநாயகி கிடைக்காமல் இருந்த பட குழு ஷங்கரின் மகள் அதிதி சங்கரை நடிக்க வைக்க பேச்சுவர்த்தை நடத்தப்பட்டது. 7ஜி ரெயின்போ காலனி முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த ரவி கிருஷ்ணா இரண்டாம் பாகத்திற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அழுத்தமான அந்த காட்சி: இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து ரவி கிருஷ்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, அந்த படத்தில் சோனியா அகர்வாலை எப்படியாவது காதலிக்க வேண்டும் என்று அவர் பின்னாலே ரவி கிருஷ்ணா சுற்றிக்கொண்டு இருப்பார். அப்போது, சோனியாக அகர்வால் ஏறும் பேருந்தில் ஏறி அவரின் பின், நிற்பார். அந்த நேரம், திடீரென பஸ் பிரேக் பிடிக்க சோனியா அகர்வாலின் மேல் ரவி கிருஷ்ணா கை வைத்துவிடுவார். இதனால், ஆத்திரம் அடைந்த சோனியா அகர்வால் கோபத்துடன் செருப்பை கழட்டி அனைவர் முன்பு அடி அடி என்று அடிப்பார்.

செருப்பால் செம அடி: படத்தில் அழுத்தமான இந்த சீன் படமாக்கப்பட்ட போது, இந்த காட்சி எதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக, நிஜமாகவே ரவி கிருஷ்ணாவை செருப்பால் அடிக்க சொன்னாராம் இயக்குநர் செல்வராகவன். நல்ல வேளையாக சோனியா ஒரே டேக்கில் முடித்துவிட்டார். இல்லையெனில் பல முறை செருப்பால் அடிவாங்கியிருப்பேன். மேலும் அக்காட்சிக்கு புதிய செருப்புதான் பயன்படுத்தப்பட்டது எனவும் அப்பேட்டியில் ரவிகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X