செக்ஸ் காட்சிகளுக்கு இனி பிரத்யேக பயிற்சியாளர்... எல்லாதுக்கும் காரணம் இந்த மீ டூ தான்!

ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் அந்தரங்க காட்சிகளுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: ஹாலிவுட்டில் மீ டூ புகார் எதிரொலியாக ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் அந்தரங்க காட்சிகளுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஒரு ஹாலிவுட் ஸ்டார் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை ஏற்று நடிப்பார். அதன்படி தற்போதைய ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரேய்க் இருக்கிறார்.

Intimacy coach appointed for James Bond 25

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அந்தரங்க, செக்ஸ் காட்சிகள் இடம்பெறுவது வழக்கம். ஒவ்வொரு படத்திலும், இரண்டு அல்லது மூன்று பெண்களுடன் ஜேம்ஸ் பாண்ட் மன்மத லீலையில் ஈடுபடுவார்.

அந்த வகையில் தற்போது உருவாகி வரும் ஜேம்ஸ் பாண்ட் 25வது படத்திலும் அந்தரங்க காட்சிகள் இருக்கின்றன. இந்த படத்தில் டேனியல் கிரேய்க்கு ஜோடியாக ஆனா தே அர்மாஸ் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் செக்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி கொடுப்பதற்காக பிரத்யேகமாக ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய நடவடிக்கைக்கு முக்கிய காரணம் கடந்த 2017ம் ஆண்டு ஹாலிவுட்டில் தொடங்கிய மீ டூ புகார் தான். இதன் எதிரொலியாக தான், நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செக்ஸ் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X