வெப்சீரிஸில் அந்த மாதிரி காட்சிகளை இப்படித்தான் எடுக்கிறோம்.. அமாண்டா கட்டிங்கின் அடடே விளக்கம்!

மும்பை: வெப்சீரிஸ்களில் அதிகளவில் ஆபாச காட்சிகள் பெருகி வருகின்றன என்கிற குற்றச்சாட்டுகளும், வெப்சீரிஸ்களுக்கு தணிக்கை வேண்டும் அதனை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்கிற விவாதங்களும் எழுந்து வருகின்றன.

Recommended Video

God Man Webseries வெளியாகுமா? தொடரும் சர்ச்சை Daniel Balaji, Gayathri Raghuram

வெளிநாட்டு வெப்சீரிஸ்களில் மட்டுமின்றி, நம்ம நாட்டில் எடுக்கப்படும் வெப்சீரிஸ்களிலும், தற்போது காமம், ஆபாசம், மதக் கலவரம், கெட்ட வார்த்தைகள் உள்பட பல விதமான எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி வருகின்றன.

எம்.எக்ஸ் பிளேயரில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வரும் மஸ்த்ராம் வெப்சீரிஸில் ஆபாச காட்சிகளை இயக்கி வரும் அமாண்டா கட்டிங் சமீபத்தில் அந்த மாதிரியான காட்சிகளை எப்படி படமாக்குகிறோம் என விளக்கியுள்ளார்.

ஓல்டு ஒயின்

ஓல்டு ஒயின்

2014ம் ஆண்டு இயக்குநர் அகிலேஷ் ஜெய்ஸ்வால் இயக்கத்தில் வெளியான பழைய படத்தை தற்போது, அதே பெயரில் புதிய வெப்சீரிஸாக 10 எபிசோடுகளுடன் எபிசோடுக்கு ஒரு ஆபாச கதை என்ற வீதத்தில் ஒட்டுமொத்த வெப்சீரிஸும் 18 பிளஸ் கன்டென்ட்டாகவே வெளியாகி இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

ராஜாராம் டு மஸ்த்ராம்

ராஜாராம் டு மஸ்த்ராம்

நல்ல நாவல்களை எழுதி பெரிய எழுத்தாளனாக வரவேண்டும் என நினைக்கும் ராஜாராம், அந்த கதைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல், ஆபாச கதைகளுக்கு தான் இங்கே மவுசு என அறியும் பட்சத்தில், தான் சந்திக்கும் மனிதர்களை வைத்து கற்பனையாக ஒவ்வொரு ஆபாச புத்தகங்களை எழுதுவதே மஸ்த்ராம் வெப்சீரிஸின் கதை. இதில், ஹீரோவாக அன்ஷுமான் ஜா நடித்துள்ளார்.

தடை செய்யணும்

தடை செய்யணும்

இந்திய இளைஞர்களை சீரழிக்கவே இப்படியொரு வெப்சீரிஸ் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, கெட்ட கெட்ட வார்த்தைகளுடன், நிர்வாண காட்சிகள், உடலுறவு காட்சிகள் என மொத்தமும் இருக்கும் இந்த வெப்சீரிஸை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இன்டிமேஸி இயக்குநர்

இன்டிமேஸி இயக்குநர்

பிரப்ளின் கவுர் தயாரிப்பில் உருவாகி உள்ள மஸ்த்ராம் முதல் சீசனில் ஆபாச காட்சிகளை படமாக்க, அந்த காட்சிகளை படமாக்குவதில் திறமை வாய்ந்த அமாண்டா கட்டிங் எனும் பெண் இயக்குநரை கனடா நாட்டில் இருந்து வரவழைத்துள்ளனர். சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ஆபாச காட்சிகள் எப்படி படமாக்கப் படுகிறது என்பதை ஓப்பனாக பேசியுள்ளார்.

ரொம்ப கவனத்துடன்

ரொம்ப கவனத்துடன்

மஸ்த்ராம் கதை முழுவதுமாக அந்த மாதிரியான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. அதனால், என்னை தயாரிப்பு தரப்பு அணுகியது. அதுபோன்ற காட்சிகளை இயக்கும் போது, நடிகர்களின் மனநிலையை சீராக வைத்திருக்க வேண்டும். நடிகைகளுக்கு எந்தவொரு சஞ்சலமும் ஏற்படாமல் அந்த காட்சிகளை எடுப்பது என்பது சவாலான விசயம் தான்.

பாலிவுட் பாடல் போல

பாலிவுட் பாடல் போல

மஸ்த்ராம் வெப்சீரிஸில் ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு கதை, புதுப்புது நடிகர்கள் என வந்து கொண்டே இருப்பார்கள். ராஜாராமின் கற்பனை கதை என்றாலும், காட்சியில் நடிகர்களை நிஜத்தில் நடிக்க வைத்து ஆக வேண்டுமே, உடலுறவு காட்சிகள் உள்ளிட்ட அந்த மாதிரியான காட்சிகளை ஒரு பாலிவுட் பாடலை இயக்குவதை போலவே இயக்கினோம் என்றார்.

மீடூ சர்ச்சை எழுந்த பின்னர்

மீடூ சர்ச்சை எழுந்த பின்னர்

உலகளவில் மீடூ சர்ச்சைகள் எழுந்த பின்னர், நடிகைகளை இந்த அளவுக்கு செக்ஸியாக நடிக்க வைப்பது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு, வெப்சீரிஸ் தயாரிப்பாளர்கள் அந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றனர். நடிகர்கள், நடிகைகளிடம் முன்னதாகவே முழு ஸ்க்ரிப்ட் குறித்த தகவலையும் கூறிய பின்னரே அவர்களை ஒப்பந்தம் செய்கின்றனர்.

சவாலான காட்சி

சவாலான காட்சி

மஸ்த்ராம் வெப்சீரிஸில் வரும் அந்த காமசூத்ரா காட்சியை படமாக்கும் போது தான் தனக்கு ரொம்ப சிரமமாக இருந்தது என்றும், ஆனால், நடிகை இஷா சப்ரா அசால்ட்டாக அத்தனையும் செய்து முடித்து தனக்கு மிகப்பெரிய பக்க பலமாக இருந்தது தான் அந்த காட்சியின் வெற்றிக்கு காரணம் என்றார்.

கொரோனாவுக்கு பின்

கொரோனாவுக்கு பின்

10 எபிசோடுகளை கொண்ட மஸ்த்ராம் முதல் சீசன் முடிந்த நிலையில், அதன் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால், கொரோனாவுக்கு பின்னர், முத்த காட்சிகளிலும், ஆபாச காட்சிகளிலும் நடிகர்களை எப்படி நடிக்க வைக்கப் போறீங்க என்ற கேள்விக்கு, அது மேலும், சவாலானதாகவே இருக்கும். போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டியது தான் எனக் கூறியுள்ளார் அமாண்டா கட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X