காட்டுக்குள் கெத்துக்காட்டிய ரஜினி.. இறங்கி சாகசம் செய்து அசத்தல்.. வாயை பிளந்த பியர் கிரில்ஸ்!

சென்னை: பியர் கிரில்சுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட இன் டு தி வைல்டு நிகழ்ச்சி நேற்று இரவு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

Recommended Video

Rajinikath Man Vs Wild Show | Aiswarya Dhanush Personal Advice for Mothers

முதல்முறையாக இப்படியொரு சாகச நிகழ்ச்சியின் மூலம் டிவி ஷோவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டது, அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், ரஜினிகாந்தும், டிவி நிகழ்ச்சியில் நேற்றுத் தோன்றி அசத்தினார். தமிழ், தெலுங்கு, இந்தி, என மொத்தம் 8 மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

டிவிக்கு முன்

டிவிக்கு முன்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதால், திங்கட்கிழமை இரவான நேற்று, டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான In to the Wild நிகழ்ச்சியை ஏகப்பட்ட பேர் பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி மாதம் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டது.

செம எனர்ஜி

செம எனர்ஜி

70 வயதை கடந்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இப்படியொரு சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பல சாகசங்களிலும் துணிச்சலாக பங்கேற்றதை பார்த்து, பியர் கிரில்ஸே பல தடவை நிகழ்ச்சியில் ஆச்சர்யப்பட்டார். எந்தவொரு நொடியும் ரஜினி டயர்ட் ஆகாமல், செம எனர்ஜியுடன் கலக்கினார்.

கமல் மெசேஜ்

கமல் மெசேஜ்

பாதையே இல்லாத இரும்பு பாலத்தை நடிகர் ரஜினிகாந்த் கடப்பதற்கு முன்னதாக, கமல்ஹாசனின் ஸ்பெஷல் வீடியோ மெசேஜை பியர் கிரில்ஸ் ரஜினிக்கு காண்பித்தார். சினிமாவில், பல ஸ்டன்ட்டுகள், சமர்சால்ட்டுகள் அடித்த உங்களுக்கு, இது ரியல் சாகசம், புகுந்து விளையாடுங்க, நீங்க போகும் இடத்தில் தண்ணீரை கண்டுபிடிப்பது சிரமம், சாகச முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றார்.

சூடான இரும்பு பாலம்

சூடான இரும்பு பாலம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இன் டு தி வைல்டு நிகழ்ச்சி, வெறும் பேச்சு வார்த்தை நிகழ்ச்சியாக இல்லாமல், பல சாகசங்களுடன் களைகட்டியது. பாதையே இல்லாத இரும்பு பாலம் ஒன்றில், இருவரும் ரோப்பின் உதவியுடன், கடக்க வேண்டும். ஆண்டவன் மீது பாரத்தை போட்டு, பியர் கிரில்ஸ் வழி நடத்துதலுடன் இந்த டாஸ்க்கை ரஜினி அசால்ட்டாக செஞ்சு முடித்தார். 50 அடிக்கு மேலே இருந்த அந்த பாலம் துரு பிடித்தும், செம சூடாகவும் இருந்தது.

டயர் பஞ்சர்

டயர் பஞ்சர்

அடுத்ததாக, ஜீப் ஒன்றில், ஆபத்தான நடுக் காட்டுக்குள் இருவரும் பயணித்தனர். பயணங்களின் நடு நடுவே ரஜினிகாந்த் 18 முதல் 23 வயது வரை கண்டக்டராக பணி புரிந்தது குறித்தும், பாலசந்தர் மூலம் சினிமாவில் அறிமுகமானது பற்றியும் பேசி வந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த ஜீப் நடு வழியில் திடீரென பஞ்சராகி இருவருக்கும் பேர் அதிர்ச்சியை கொடுத்தது.

மாதவன், அக்‌ஷய் குமார்

மாதவன், அக்‌ஷய் குமார்

உலக நாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து, நடிகர் மாதவன் மற்றும் அக்‌ஷய் குமாரின் ஸ்பெஷல் வீடியோ மெசேஜ்களும் ரஜினிகாந்துக்கு காண்பிக்கப்பட்டன. தலைவரே அடிச்சுத் தூக்குங்க, காட்டுக்குள் நீங்க செய்யும் சாகசத்தை காண காத்திருக்கிறோம் என மாதவனும், கடைசி சவாலுக்கு முன்னதாக அக்‌ஷய் குமார், தலைவரே இதை நீங்க சாதிச்சு காட்டுவீங்க என்றும் ஊக்கமளித்தனர்.

மலை ஏற்றம்

மலை ஏற்றம்

பந்திப்பூர் காட்டுக்குள் தண்ணீரை தேடி அலைந்த ரஜினிகாந்த் மற்றும் பியர் கிரில்ஸ், ஒரு சின்ன மலை போன்ற இடத்தை ரோப் போட்டு, ஏறி கடந்தனர். நடிகர் ரஜினிகாந்த், அங்கு சற்று சறுக்கவே, பியர் கிரில்ஸ் உடன் வந்து அவருக்கு உதவி செய்தார். ரஜினியின் கைகளில் சிராய்ப்புகளும், ரத்தங்களும் ஏற்பட்டன.

தண்ணீரில் தைரியமாக

தண்ணீரில் தைரியமாக

கடைசியாக காட்டுக்குள் தண்ணீரை இருவரும் கண்டு பிடித்தனர். பாம்புகள், முதலைகள், மேலும் இந்த தண்ணீரைத் தேடித்தான் அங்குள்ள புலிகள் வந்து செல்லும் என்று பியர் கிரில்ஸ் எச்சரித்துக் கொண்டே வந்தார். எந்த ஒரு பயமும் இன்றி, சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த், துணிச்சலுடன் அந்த ஆழமான குளிர்ந்த நீரில் இறங்கி நடந்து, தனது கடைசி சவாலையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X