ஹர்த்திக் பாண்டியா முதல்.. சாரா அர்ஜுன் வரை.. மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்.. பாலிவுட்டின் டாப் 5 செய்திகள்

மும்பை: இந்திய திரை உலகில் அதிக பணம் புழங்கும் திரையுலகில் முதன்மையான இடத்தில் இருப்பது பாலிவுட் திரையுலகம் தான். இந்தியாவில் பல மொழிகளில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தொடங்கி, பணியாற்றும் டெக்னீஷியன்கள் வரை பலரும் நினைப்பது பாலிவுட்டில் கால்பதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஓடிடி உலகத்தின் வேகமான வளர்ச்சி பாலிவுட் மீதான மோகத்தை குறைத்துள்ளது. இப்படி இருக்கும்போது, பாலிவுட்டின் டாப் 5 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

1. ரன்வீர் சிங்கிற்கு ஜோடியான விக்ரம் மகள்: ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி உள்ள துரந்தர் படத்தின் டிரைலர் வீடியோ படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக தமிழில் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாரா அர்ஜுன் நடிக்கிறார். ரன்வீர் சிங்கிற்கு 40 வயது ஆகிறது. அதேபோல், சாரா அர்ஜுனுக்கு 20 வயதே ஆகிறது. இவர்களின் வயது வித்தியாசம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சாரா அர்ஜுனை தேர்வு செய்வதற்கு முன்னர் 1300 ஆடிஷன்கள் நடத்தப்பட்டு, சாரா தேர்வு செய்யப்பட்டதாக இயக்குநர் ஆதித்யா தார் தெரிவித்தார். படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

Intresting Top 5 Bollywood News About Deepika Padukone Priyanka Chopra and Hardik Pandya New Lover And Etc

2. ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலி: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தைக்கு தகப்பனும் கூட. இவர் தனது முதல் மனைவி நடாஷாவை பிரிவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்தார். இப்படி இருக்கும்போது அவர் தனது புதிய காதலியை தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். இவர் தற்போது பாலிவுட் நடிகை மஹிமா சர்மாவுடன் டேட்டிங்கில் இருக்கிறார். இது தொடர்பாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

3. நடிகையின் மரணத்தில் சந்தேகம்: 90களில் பாலிவுட்டை கலக்கிக் கொண்டு இருந்தவர் நடிகை திவ்ய பாரதி. 19 வயதைக் கடந்து 20வது வயதை நெருங்கிக் கொண்டிருந்த இவர், தனது வீட்டு பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இவரது மரணம் பெரும் அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் பாலிவுட் முழுக்க எழுப்பியது. இவர் ஏப்ரல் 5ஆம் தேதி 1993 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் பாலிவுட்டில் அறிமுகமான 3 ஆண்டுகளில் 20 படங்களில் நடித்திருந்தார். இவர் மீது தொழில் பகை காரணமாக யாராவது கொன்று இருப்பார்களா என்ற சந்தேகம் இப்போது வரை பாலிவுட்டை சுற்றி வருகிறது.

Intresting Top 5 Bollywood News About Deepika Padukone Priyanka Chopra and Hardik Pandya New Lover And Etc

4. பட்ஜெட் முக்கியமே இல்லை: கல்கி 2898 ஏ.டி மற்றும் ஸ்பிரிட் உள்ளிட்ட படங்களில் இருந்து அதிரடியாக விலகிய பின்னர் தீபிகா படுகோனின் அனைத்து நடவடிக்கைகளும் பெரும் கவனத்தையே ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கும்போது நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ள ஒரு கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது தன்னை பெரிய பட்ஜெட் என்ற வார்த்தைகள் ஈர்க்கவில்லை என்றும், தான் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது கவனத்தை ஈர்த்துள்ளது.

5. பெருமையில் பிரியங்கா சோப்ரா: நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் சுகுமாறன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இவர்களுடன் நடிப்பது எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிப்பது தனக்கு பெருமையான உணர்வைத் தருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X