தர்பார்.. பர்ஸ்ட் லுக் போஸ்டரை தலைகீழா திருப்பிப் பார்த்தீங்களா பாஸ்!
தர்பார் போஸ்டரை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: ரஜினியின் தர்பார் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர்.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு தர்பார் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது. அதில், ரஜினி போலீஸ் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

கூடவே போஸ்டரில் சில வாக்கியங்களும் இடம் பெற்றுள்ளன. ஒருபுறத்தில் 'நான் நல்லவனா, கெட்டவனா இல்ல ரொம்பக் கெட்டவனா என்பதை நீயே முடிவு பண்ணிக்கோ' என்ற பஞ்ச் உள்ளது. அதேபோல், ரஜினியின் மற்றொரு புறத்தில் கையெழுத்து போன்ற கிறுக்கல் ஒன்று காணப்படுகிறது.
ஒருவேளை அது ரஜினியின் கையெழுத்தா என உற்றுப் பார்த்தால் அப்படியில்லை. சரி அது என்னவாக இருக்கும் என தலைகீழாகத் திருப்பிப் பார்த்தால், அது 'மும்பை' எனத் தெரிய வருகிறது.
நிச்சயம் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் அதனை போஸ்டரில் அப்படி தலைகீழாக எழுதியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. படம் வெளி வரும் போது அது தெரிய வரும்.
இதுஒருபுறம் இருக்க நாளை மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுவீச்சில் அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











