ஐபிஎல் நிறைவு விழா.. ரன்வீரின் நடனம்.. ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டு!
குஜராத் : ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி குஜராத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டு மற்றும் ரன்வீரின் அசத்தலான நடனத்துடன் தொடங்கி உள்ளது.
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டிக்கு முன்னதாக, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த நிறைவு விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிறைவு விழா இந்திய நேரப்படி மாலை 6:25 மணிக்கு தொடங்கியது. அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் '83' உலகக் கோப்பை திரைப்படத்தின் ஒரு பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதையடுத்து, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாடலுடன் ஐ.பி.எஸ் நிகழ்ச்சிகளை கட்டி உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குவித்த ரசிகர்களை வரவேற்று பேசினார். முன் எப்போதும் இல்லாத வகையில், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்துள்ளனர். ஐபிஎல் 2022 இன் மெகா பைனலில் குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அகமதாபாத்தில் நடத்துகிறது. இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு போட்டி தொடங்கும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2022 நிறைவு விழா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்டார் கோல்ட் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. விழாவின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டார் இணையதளம் மற்றும் செயலியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











