CSK: சேப்பாக்கத்தில் தனுஷ் உடன் செல்லம்மா.. சிஎஸ்கே வின்னும்மா.. அஜித் குடும்பமும் ஆஜர்!
சென்னை: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
அந்த போட்டியில் முதலில் பந்து வீசிய சென்னை அணி 134/7 ரன்களில் ஹைதராபாத்தை சுருட்டியது. அதன் பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம் போல இறுதி வரைக்கும் மேட்ச்சை இழுத்துக் கொண்டு சென்று 18.4 ஓவரில் ஒருவழியாக சூப்பர் வெற்றியை பதிவு செய்தது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் சேர்ந்து பல சினிமா பிரபலங்களும் இந்த போட்டியையும் சென்னையில் நேற்று இரவு கண்டு ரசித்தனர்.
சேப்பாக்கத்தில் செல்லம்மா: சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை வரிசையாக சினிமா பிரபலங்கள் நேரில் வந்து கண்டு ரசிக்கின்றனர். மறைமுக ஆர்டர் ஏதாவதா? அல்லது அவர்களே விரும்பி பார்க்கின்றனரா என்கிற சந்தேகம் கூட ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், த்ரிஷா, மேகா ஆகாஷ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முந்தைய போட்டிகளை கண்டு ரசித்த நிலையில், நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை நடிகை பிரியங்கா மோகன் நேரில் கண்டு ரசித்தார். அவரை ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
கேப்டன் மில்லர் தனுஷ்: கேப்டன் மில்லர் படக்குழு ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த போட்டியை கண்டு ரசித்த நிலையில், சென்னையில் நடைபெற்ற போட்டியையும் கண்டு ரசித்துள்ளது. பிரியங்கா மோகன் உடன் நடிகர் தனுஷும் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்தார்.

அவருடன் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் வந்து பார்த்து வரும் நடிகர் சதீஷ் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் தீயாக பரவி வருகிறது.
அஜித் மகன்: பிரியங்கா மோகனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கும் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். குட்டி தல என ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து அவரது போட்டோக்களை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கிற்கு ஸ்போர்ட்ஸ் மேல் அதிக ஆர்வம் உள்ள நிலையில், அவரது அம்மா ஷாலினி கால்பந்தாட்ட போட்டி நடக்கும் இடங்களுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களுக்கும் அழைத்து வருகிறார்.

அம்மாவுடன் வந்த அஜித் மகள்: நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் மற்றும் மகள் இருவரையும் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை பார்க்க சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்திருந்தார். அந்த காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











