IPL: தோனி களத்தில் இருந்தும்.. RCBயிடம் மோசமாக தோற்ற CSK.. அதிர்ச்சி அடைந்த அஜித் மனைவி ஷாலினி!
சென்னை: 18 வது ஐபிஎல் சீசன் கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.10 அணிகள் களமிறங்கியுள்ள இந்த சீசனில் ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாகவும், ரசிகர்களை ஆரவாரம் படுத்தும் விதமாகவும் உள்ளது. இப்படியான நிலையில் நேற்று அதாவது, மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியிடம் சென்னை அணி மிக மோசமான தோல்வியை தழுவியது. போட்டியை நேரில் பார்த்த நடிகை ஷாலினி, கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா பிரபலங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர்களாக உள்ளார்கள் என்பது பலருக்கும் தெரியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போது பெரும்பாலும் போட்டியை நேரில் வந்து பார்த்து விடுகிறார்கள். இதில் நடிகர் அஜித் குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினியும் அவர்களின் மகன் ஆத்விக் என இருவரும் போட்டியை நேரில் சென்று பார்த்துள்ளார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 16 வருடங்களாக வீழ்த்தியதே கிடையாது. கடைசியாக ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனான 2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி இருந்தது. அதன் பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கேப்டன்கள் மாறினார்கள், ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக இந்த சோகமும் மோசமான சாதனையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சுற்றிக்கொண்டே இருந்தது.

சி.எஸ்.கே: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஆண்டுகளாக சென்னைக்கு வருவதும் தோல்வியைச் சந்திப்பதுமாக இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு வெற்றி என்பது கிடைக்கவில்லை. அப்படி இருக்கும்போது, 17வது ஆண்டாக இந்த ஆண்டுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது.

ஆர்.சி.பி: இந்த போட்டியை பார்க்க திரைப்பிரபலங்களில் நடிகை ஷாலினி தனது மகன் ஆத்விக் உடன் வந்திருந்தார். பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் என்ற இமாலய ரன்களை குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பம் முதலே அடி விழுந்து கொண்டு இருந்தது. குறிப்பாக, பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் சென்னை அணி வீரர்களின் விக்கெட்டுகளை சொல்லி சொல்லி எடுத்தார்கள்.

ஷாலினி: சரியான பார்ட்னர்ஷிப் அமையாமல் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தது. அப்போது, ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷிவம் துபே என இருவரும் சிறப்பாக விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக்கிக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் இருவரும் விளையாடினால், கட்டாயம் சென்னை அணி இலக்கை நெருங்க வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் நம்பிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இவர்களின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றினார், பெங்களூரு பவுலர் யாஷ் தயாள். ஆட்டத்தின் 13 வது ஓவரில் இது நடக்க, போட்டியைப் பார்த்துக் கொண்டு இருந்த ஷாலினி அதிர்ச்சி ஆகிவிட்டார். அப்போது ஷாலினி கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. களத்தில் தோனி இருந்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை என பெங்களூரு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் சென்னை அணி முதலில் பந்து வீசும் எனத் தெவித்தார். அதன் படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினார்கள். இருவரில் பிலிப் சால்ட் ருத்ரதாண்டவம் ஆட, விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதைப்போல் நிதானமாக ஆடிக் கொண்டு இருந்தார்.
விராட் கோலி: குறிப்பாக பத்திரனா ஓவரில் விராட் கோலி ஹெல்மெட்டில் அடிவாங்கினார். அதற்கு முன்னர் ஓவரில் தலைக்கு வந்த பந்தை வைய்டு கேட்க நினைத்த அவர், அதன் பின்னர் வேண்டாம் என முடிவெடுத்து அமைதியாக இருந்துவிட்டார். ஹெல்மெட்டில் பந்து பட்டபின்னர் பத்திரான வீசிய இரண்டு பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டி அடித்தார். இப்படி இருக்கும்போது, சென்னை அணி கிட்டத்தட்ட 5 கேட்களை மிஸ் செய்தனர். பந்துவீச்சும் அந்த அளவிற்கு சென்னைக்கு எடுபடவில்லை. பெங்களூரு அணி தங்களது ஹோம் கிரவுண்டில் விளையாடுவதைப்போல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். கடைசி ஓவரில் சிக்சர் மழை பொழிந்த டிம் டேவிட் அணியின் ஸ்கோர் 196 ரன்களை எட்ட உதவினார்.
ஆர்.சி.பி: பெங்களூரு அணி சார்பில் கேப்டன் ரஜித் படிதார் அரைசதம் விளாசினார். மற்றவர்களும் சிறப்பாக விளையாடினர். அதன் பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே சரியில்லை. களமிறங்கிய முதல் ஐந்து வீரர்களில் ரச்சின் ரவிந்திராவைத் தவிர மீதி நான்கு பேரும் இரட்டை இலக்கங்களைக் கூட எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் சென்னை அணி 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
தோனி: ரசிகர்கள் அனைவரும் தோனி கள்மிறங்க வேண்டும் என கத்திக் கொண்டு இருந்தார்கள். ஆனால் தோனி ஆட்டத்தின் 16வது ஓவரில்தான் களமிறங்கினார். மேலும் களமிறங்கிய அவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. கடைசி ஓவரில் மட்டும் இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி பறக்கவிட்டார். இதனால் சென்னை அணி ரசிகர்கள்தான் மைதானத்தில் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தார்களே தவிர, சென்னை அணியின் வெற்றிக்கு கொஞ்சமும் உதவவில்லை. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
மோசமான வரலாறு: பெங்களூரு அணி இதற்கு முன்னர் சென்னைக்கு வந்து வெற்றி பெற்ற போட்டி என்றால், அது 2008ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிதான். அதன் பின்னர் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது கிடையாது. இந்த மோசமான வரலாறுக்கு பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











