ஐ.பி.எல். ஃபைனல்: மும்பை அணி எத்தனை ரன் எடுக்கும் என சரியாக கணித்த நடிகர்
சென்னை: ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை அணி எத்தனை ரன்கள் எடுக்கும் என்பதை நடிகர் நட்ராஜ் மிகச் சரியாக கணித்தார்.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ஒரேயொரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
மும்பை அணி வென்றபோதிலும் அனைவரும் சென்னை அணியின் கடின உழைப்பு, ரத்தம் சிந்தி விளையாடிய வாட்சனை பற்றித் தான் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ரன்கள்
இறுதிப் போட்டி நடந்து கொண்டிருந்தபோது மும்பை அணி எத்தனை ரன்கள் எடுக்கும் என்று பலரும் கணித்து ட்வீட் போட்டனர். ஆனால் நடிகர் நட்ராஜ் மிகச் சரியாக கணித்தது தான் ஆச்சரியமே.
சதீஷ்
நட்ராஜின் கணிப்பை பார்த்த நடிகர் சதீஷோ ஸ்வாமிஜி அப்படியே ரிசல்ட்டையும் சொல்லிவிட்டால் பல ஹார்ட் அட்டாக்கை தவிர்க்கலாம் என்றார்.
ஆச்சரியம்
மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் தான் எடுக்கும் என்று எப்படி பாஸ் சரியாக கணித்தீர்கள் என நெட்டிசன்கள் நட்டியை பார்த்து வியந்துள்ளனர்.
வாட்சன்
சென்னை அணி தோல்வி அடைந்தபோதிலும் ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டது. வாட்சன் சென்னை ரசிகர்களின் ஹீரோவாகிவிட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











