இந்த வயதிலும் மாடல் அழகியை மடக்கிப்போட்ட லலித் மோடி.. சுஷ்மிதாவை கழட்டிவிட்டாரா?
சென்னை: சர்ச்சைக்கு பெயர் போன லலித்மோடி மாடல் அழகியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
உலகளவில் மிகவும் பிரலமாகவும், பண மழை பொழியும் ஐபிஎல் லீக்கின் முதல் சேர்மனாக இருந்தவர் லலித் மோடி. இவர் மோசடி புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார்.

லலித் மோடி: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ரூ.470 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக பிசிசிஐ புகார் அளித்தது. அதன் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது லலித் மோடியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்தார்.
சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்: இதையடுத்து கடந்த ஆண்டு லலித்மோடி இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக அறிவித்து, சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார். மேலும், சுஷ்மிதா சென் சிறந்த பார்ட்னர் என்றும், அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. டேட்டிங் மட்டும் செய்கிறோம் என கூறியிருந்தார்.

புதிய காதலி: இந்நிலையில், லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே மற்றும் அவரது பிரிட்டிஷ் பார்ட்னர் ட்ரினா திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லலித் மோடி, சூப்பர் மாடலான உஜ்வாலா ராவத்துடன் கலந்து கொண்டார்.
கழட்டிவிட்டாரா:இருவரும் சிரித்தபடி படிக்கட்டில் இருந்த கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். உஜ்வாலா லலித் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன், அந்த தொழிலதிபருக்கு மீண்டும் புதிய காதலி கிடைத்து விட்டார் என்றும், அப்போ சுஷ்மிதா சென் அவ்வளவு தானா என்றும் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications