»   »  ஒரு நாள் முன்பே வெளியான உதயநிதி ஸ்டாலினின் இப்படை வெல்லும்!

ஒரு நாள் முன்பே வெளியான உதயநிதி ஸ்டாலினின் இப்படை வெல்லும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் படம் வெள்ளிக்கிழமைக்கு ஒரு நாள் முன்பே திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

வழக்கமாக வெள்ளிக்கிழமை புதிய படங்கள் வெளியாகும். நாளை நயன்தாராவின் அறம், சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்கள் வெளியாகின்றன.

Ippadai Vellum from Today

இதனால் ஒரு நாள் முன்கூட்டியே இப்படை வெல்லும் படத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் சூரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். முதல் முறையாக உதயநிதிக்கு ஜோடியாகியுள்ளார் மஞ்சிமா மோகன்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று 250க்கும் அதிகமான அரங்குகளில் தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

English summary
Udhayanidhi Stalin's new movie Ippadai Vellum has released Today all over the world.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil