twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதயநிதி படம் எப்படி உள்ளே வந்துச்சு..? - சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சர்ச்சை!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : 15-வது சர்வதேச சென்னை திரைப்பட விழா கடந்த டிசம்பர் 14-ம் தேதி துவங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையிலுள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்யன் கல்சுரல் சென்டர் ஆகிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.

    என்.எஃப்.டி.சி மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த திரைப்பட விழாவில் 150 படங்கள் ஆறு கேட்டகிரிகளில் திரையிடப்பட இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி எம்.ஜி.ஆர் நடித்த இரு படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.

    Ippadai vellum movie in Chennai international film festival

    இந்த திரைப்பட விழாவில் மாநகரம், 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன், விக்ரம் வேதா ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டன.

    திரைப்பட விழா தொடங்கப்பட்ட பிறகு இந்தப்பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும்' படமும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது. விழா துவங்கிய பின்னர் எந்த அடிப்படையில் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்தார்கள் என்று திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

    English summary
    The 15th Chennai International Film Festival begins on December 14th. After the opening ceremony, 'Ippadai Vellum' starring Udhayanidhi Stalin will be screened in a special scene. After the ceremony, Ippadai vellum was selected on which basis, is controversial now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X