செம ஹாட் போட்டோ வெளியிட்ட சூப்பர் ஸ்டார் மகள்
மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா தனது போட்டோஷூட் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது காதலருடன் சேர்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் தான் முதன்முதலாக கலந்து கொண்ட போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஐரா கான்
ஐரா கானின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் செம ஹாட்டாக, ஃபிட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவரின் வாஷ்போர்டு ஆப்ஸை பார்த்து பாராட்டுகிறார்கள். அந்த புகைப்படத்தில் ஐரா தனது தொப்புளில் பியர்சிங் செய்திருப்பது தெரிகிறது. வழக்கமாக ஐரா இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டால் கிண்டல் செய்பவர்கள் தற்போது அவரை பாராட்டியுள்ளனர்.

ஹீரோயின்
ஐராவுக்கு பாலிவுட்டில் ஹீரோயினாகும் ஆசை வந்துவிட்டது போன்று அதனால் தான் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் ஆசையும் தப்பில்லை. ஐரா அழகாக, ஃபிட்டாக இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஐராவுக்கு கேமராவுக்கு பின்னால் இருக்கத் தான் ஆசையாம்.

பாலிவுட்
தனது மூத்த மகன் ஜுனைத் மற்றும் மகள் ஐரா ஆகியோர் பாலிவுட்டில் அறிமுகமாகக்கூடும் என்பதை ஆமீர் கான் மறுக்கவில்லை. அதே சமயம் அவர்களுக்கு நான் வாய்ப்பு வாங்கிக் கொடுக்க மாட்டேன், திறமை இருந்தால் வாய்ப்பு தன்னால் கிடைக்கும் என்று ஆமீர் தெரிவித்துள்ளார். ஜுனைத் ஸ்கிரீன் டெஸ்ட்டிற்கு சென்று தேர்வானால் மட்டுமே நடிக்க முடியும் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இயக்கம்
என் பிள்ளைகள் எடுக்கும் முடிவை நான் ஆதரிப்பேன். அதே சமயம் என்னால் அவர்கள் ஆதாயம் தேட முடியாது. திறமையை மட்டும் வைத்து தான் முன்னேறப் பார்க்க வேண்டும். ஐராவுக்கு எதில் நாட்டம் என்பது சரியாக தெரியவில்லை. அவருக்கு படம் இயக்குவதில் தான் ஆர்வம் என்று நினைக்கிறேன். ஐரா இயக்குநர் ஆக விரும்புகிறாரா என்று சரியாக தெரியவில்லை என்கிறார் ஆமீர் கான்.


Click it and Unblock the Notifications











