Iraivan Box Office: பொன்னியின் செல்வன் ஜெயம் ரவிக்கா இந்த நிலைமை?.. இறைவன் முதல் நாள் வசூல் இதோ!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் லீடு ரோலில் நடித்த ஜெயம் ரவியின் அடுத்த படமான இறைவன் எந்தவொரு ஹைப்பையும் ஏற்படுத்தாமல் பெரியளவில் புரமோஷன் எல்லாம் செய்து வீண் செலவு செய்யாமல் வந்தவரை லாபம் என ரிலீஸ் செய்த நிலையில், அதன் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ஜெய்யை வைத்து வாமனன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அகமது. அதன் பின்னர் ஜீவா, வினய், சந்தானம் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான நண்பர்கள் கொண்டாடும் என்றென்றும் புன்னகை படத்தை இயக்கியிருந்தார். உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகாவை வைத்து மனிதன் எனும் தரமான படத்தையும் கொடுத்திருந்தார் அகமது.

டல்லடித்த இறைவன்: இந்நிலையில், ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ் நடிப்பில் நேற்று வெளியான இறைவன் படத்தை இயக்குநர் அகமது இயக்கியிருந்த நிலையில், அந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவை சுத்தியலால் அடிப்பது போன்ற ப்ரோமோ மற்றும் இறைவன் டிரெய்லர் உள்ளிட்டவற்றால் மிரட்டி இருந்தார்.
தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்துள்ள நிலையில் ரசிகர்கள் அப்படியொரு படமாக இது இருக்கும் என நம்பினர். ஆனால், இறைவன் படம் ரசிகர்களை பெரிதளவில் திருப்திப்படுத்தவில்லை என ரிப்போர்ட்டுகள் வெளியாகியுள்ளன.
இறைவன் வசூல்: மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் லீடு ரோலில் நடித்த ஜெயம் ரவியின் அடுத்த படம் முதல் நாளிலாவது வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 2.5 கோடி ரூபாயும் மற்ற இடங்களில் சேர்த்து 60 லட்சம் ரூபாயும் என ஒட்டுமொத்தமாக மூன்று கோடி ரூபாய் அளவிற்கு தான் இறைவன் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூல் ஈட்டிய நிலையில், தொடர்ந்து லேடி சூப்பர்ஸ்டாருக்கு தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் கூட அமையவில்லையே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
தப்பிப்பாரா ஜெயம் ரவி: இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் டாப்ஸி நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாகி கிடப்பில் கிடக்கும் ஜன கண மன திரைப்படம் இந்த படத்தின் சொதப்பல் காரணமாக உருவாகுமா? ஆகாதா? என்கிற கேள்விகளும் தற்போது எழுந்திருப்பதாக கூறுகின்றனர்.
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து சைரன், ஜீனி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. எம். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து தனி ஒருவன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











