5 ஆண்டு கொண்டாட்டத்தில் இறைவி படம் நினைவுகூர்ந்த கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் இறைவி.

பெண்களின் சுதந்திரம் குறித்த கருவை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் தற்போது 5 ஆண்டு நிறைவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி படத்தின் நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான படம் இறைவி. பெண்களின் அடிமைத்தனம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை சிறப்பான வகையில் சொன்ன இந்தப் படம் கடந்த 2016 ஜூன் 3ம் தேதி வெளியானது.

நினைவுகளை பகிர்ந்த நடிகர்கள்

நினைவுகளை பகிர்ந்த நடிகர்கள்

விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி படத்தின் நடிகர்கள் மற்றும் இயக்குநர் தங்களுடைய நினைவுகளை ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் பெருமிதம்

கார்த்திக் சுப்புராஜ் பெருமிதம்

இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படம் தனது மனதிற்கு நெருக்கமான படம் என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் க்ளைமாக்சின் டிராப்டையும் இணைத்துள்ளார். இதனிடையே இந்த படம் தமிழ் சினிமாவின் மைல்கல் என்று தெரிவித்துள்ள நடிகர் எஸ்ஜே சூர்யா தன்னை இந்த படத்திற்காக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வீடியோ இணைப்பு

வீடியோ இணைப்பு

மேலும் க்ளைமாக்ஸ் காட்சிக்காக ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட காட்சியை தன்னால் இன்னும் மறக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அதன் வீடியோவையும் இணைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் 5 கொண்டாட்டத்தில் படத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X