கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம்- இறைவி?
பீட்சா, ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்திற்கு ‘இறைவி' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறும்பட இயக்குநராக இருந்து பீட்சா மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்திக் சுப்பராஜ், பீட்சா தந்த தெம்பில் சித்தார்த், சிம்ஹா, லக்ஷ்மிமேனனை வைத்து ஜிகர்தண்டா படத்தை தனது இரண்டாவது படமாகக் கொடுத்தார். ஜிகர்தண்டா படம் விமர்சகர்களிடம் மட்டுமல்ல, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முதல் படத்தில் வெற்றி பெற்ற பல இயக்குநர்கள் இரண்டாவது படத்தில் தோல்வியடைந்து காணாமல் போய் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட அப்படி சில இயக்குநர்கள் காணாமல்போய் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தப்பித்துவிட்டார்.

இறைவி
இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்து இயக்கப்போகும் படத்திற்கு இறைவி என்று பெயர் வைத்துள்ளாராம். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கில் இருக்கும் கார்த்திக் சுப்பாராஜ் அதை முடித்த பிறகு படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்த தேர்வில் இறங்குவாராம்.

பாபி சிம்ஹா, கருணாகரன்
இறைவி படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனராம். எனினும் கண்டிப்பாக சிம்ஹாவும், கருணாகரனும் இறைவியில் இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஜிகர்தண்டா வில்லன்
சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதையடுத்து பீட்சா, நான் ராஜாவாகப் போகிறேன். சூதுகவ்வும், நேரம் ஆகிய படங்களில் நடித்த சிம்ஹாவுக்கு பீட்சா கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடித்த ஜிகர்தண்டா பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.

ஹீரோ வாய்ப்பு
அப்படத்தின் ஹீரோ சித்தார்த்தை விட வில்லனாக நடித்த சிம்ஹாவின் நடிப்பே பெரிய அளவில் பேசப்பட்டதால், இப்போது பத்ரி இயக்கும் ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார்.

ஓகே சொன்ன கார்த்திக் சுப்புராஜ்
இந்த நிலையில், பீட்சா, ஜிகர்தண்டா படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் இறைவி என்ற புதிய படத்திலும் பாபி சிம்ஹாவுக்கு முக்கியமான வேடமாம். இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார் என்பதே இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், சிம்ஹா மட்டும் கதை ரெடி பண்ணுவதற்கு முன்பே ஓ.கே வாகி விட்டாராம். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சிம்ஹா.

சொன்னது போலவே
மேலும், ஜிகர்தண்டாவில் தான் நடித்துக்கொண்டிருந்தபோதே, இந்த படம் வெளியாகும்போது தமிழ்நாடே என்னைப்பற்றி பேசும் என்று தனது நண்பர்களிடம் கூறி வந்தார் பாபி சிம்ஹா. அவர் சொன்னது போலவே ஜிகர்தண்டா வெளியானபோது பாபி பெரிய அளவில் பேசப்பட்டார்.

முக்கிய கதாபாத்திரம்
அதேபோல் இப்போதும், கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்திலும் எனது கேரக்டர் பேசப்படும். ஜிகர்தண்டாவைப் போலவே இறைவி படமும் எனக்கு இன்னொரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறி வருகிறார் சிம்ஹா.


Click it and Unblock the Notifications











