வசூலில்...இது நம்ம ஆளுவை வீழ்த்தியது கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி'
சென்னை: கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கடந்த வாரம் இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என 2 படங்கள் வெளியாகின.
இறைவியில் கார்த்தி சுப்புராஜ் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் எழில் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
இவ்விரு படங்களின் வசூல் நிலவரங்களை இங்கே பார்க்கலாம்.

இறைவி
விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடிப்பில் கடந்த வாரம் வெளியான இறைவி சென்னையில் 78.47 லட்சங்களை வசூல் செய்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் இப்படத்தின் வசூல் எந்தவித்திலும் பாதிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

இது நம்ம ஆளு
2 வது வாரத்தில் சிம்புவின் இது நம்ம ஆளு ஒருபடி கீழிறங்கி 54.38 லட்சங்களுடன் 2 வது இடத்தில் இருக்கிறது. எனினும் 10 நாட்கள் முடிவில் இப்படம் 2.50 கோடிகளை சென்னையில் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
விஷ்ணு- நிக்கி கல்ராணியின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் 49.80 லட்சங்களை வசூலித்து 3 வது இடத்தில் இருக்கிறது. காமெடிக்கு உத்தரவாதம் என்பதால் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று தியேட்டர் வட்டாரங்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றன.

பிறமொழிப் படங்கள்
அக்ஷய் குமாரின் ஹவுஸ்புல் 3 26.27 லட்சங்களுடன் 4 வது இடத்தையும், நிதின்-சமந்தாவின் அ ஆ 19.28 லட்சங்களுடன் 5 வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
வரும் வாரங்களில் புதிய படங்கள் வெளியாகும்போது மேலே சொன்ன படங்களின் வசூல் நிலவரம் மாறக்கூடும்.


Click it and Unblock the Notifications











