twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘

    |

    சென்னை : இயற்கையை அதன் போன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதை தான் 'இறலி'.

    இறலி படத்தை ஜெய். விஜயகுமார் இயக்குகிறார். படத்தின் நாயகனாக வெண்ணிஸ் கண்ணா நடித்திருக்கிறார். நாயகியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார். இவர் 'குயின்' படத்தில் நடித்தவர். மலையாளத்தில் மோகன்லாலின் 'லூசிஃபர் 'என்ற படத்தில் மஞ்சுவாரியார் மகளாக நடித்தவர். குயின் படத்திற்காக சைமா விருது, ஆசியா விஷன் விருது , நானா விருது, வனிதா விருது போன்ற ஏராளமான விருதுகளைக் குவித்தவர்.

    Irali tamil movie

    படத்தைப் பற்றி இயக்குநர் ஜெய். விஜயகுமார் கூறும்போது, "இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். மீறி செயற்கை வழிக்கு இழுத்தால், அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை எச்சரிக்கும் படமாக 'இறலி' இருக்கும் என்றார்.

    Irali tamil movie

    'இறலி' என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விளைவு என்பது அதன் பொருளாகும். ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அதைத் தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை" என்கிறார் .

    Irali tamil movie

    படத்தின் நாயகன் வெண்ணிஸ் கண்ணா பேசும்போது, "இறலி'படத்தின் கதையை கேட்ட நான் இதைத் தயாரிப்பதற்கும் நாயகனாக நடிப்பதற்கும் ஒப்புக்கொண்டேன். இந்தச் சவாலான கதையில் புதுமுகம் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்ற போது நானே அதை ஏற்று நடிக்கச் சம்மதித்தேன். படத்தில் நான் ஒரு விவசாயி மகனாக நடிக்கிறேன்.

    Irali tamil movie

    ரசாயன உரங்களைப் போட்டு மண் மலடாகிப்போனதால் விளைச்சல் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் விவசாயத்துக்கு வட்டிக்குக் கடன் வாங்கி கட்ட முடியாமல் போனதால் என் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு விவசாயியின் தற்கொலைக்குப் பிறகு அந்த குடும்பம் என்னாகும் என்று சொல்கிற படமாகவும் இது இருக்கும். அமுதவாணன், சுரேந்தர் என் நண்பர்களாக வருகிறார்கள்.

    அடி வயிற்றில் சிசு.. அப்படியும் அசராமல்.. அடிமுறை கற்று அசத்திய சினேகா!அடி வயிற்றில் சிசு.. அப்படியும் அசராமல்.. அடிமுறை கற்று அசத்திய சினேகா!

    Recommended Video

    கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie

    தானே கனிந்து போகிற பழத்தை கனிய விடாமல் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைப்பதால் அந்தப்பழத்தில் ரசாயனத்தின் சாரம் ஏறி விஷத்தன்மை ஆகிவிடுகிறது. இறுதியில் அந்த பழமே விஷமாகி விடுகிறது . பழமே விஷமானால் ? அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட பழங்களை உண்பதால் நம்நாட்டில் எவ்வளவோ குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். உயிரை விடுகிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படமாக 'இறலி' இருக்கும்.

    English summary
    Irali tamil movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X