ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்..ஆடைகளை கழட்டி எதிர்ப்பை காட்டிய நடிகை!
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி தனது ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டி வீசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஈரானில் சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தெஹ்ரான் பகுதியிலிருந்த சில பெண்கள் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக, போலீசார் அவர்களை தாக்கினார்.
அதே போல மாஷா அமினி என்ற பெண் அணிந்திருந்த முக்காடு கழட்டு விட்டதால், போலீசார் அவரை தாக்கினர். இதனால் 22 வயதே ஆன இளம்பெண், கடந்த மாதம் 17ந் தேதி உயிரிழந்தார்.

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம்
மாஷா மீதான வன்முறையை கண்டித்து ஈரான் முழுவதும் பல பெண்கள் கட்டாய ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தலைமுடியை வெட்டியும் அவர்கள் போராடுகின்றனர். செப்டம்பர் 20ந் தேதி தெஹ்ரானில் நடந்த மிகப்பெரிய போராட்டத்தின் போது 17 வயது சிறுமி நிகா ஷகராமி காணாமல் போனார். சில நாள்களுக்குப் பின், அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தீவிரமான போராட்டம்
சிறுமியின் மரணத்துக்குக் காரணம், அங்கிருந்த மதகும்பல் தான் என்று ஈரானிய அரசு தரப்பிலும், பாதுகாப்புப்படையினர் தான் காரணம் என்று போராட்டக்காரர்களும் கூறி வருகிறது. ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மீண்டும் ஒரு சிறுமியின் மரணம் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி உள்ளது.

ஆடைகளை கழட்டி வீசி போராட்டம்
இந்நிலையில், ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் எந்த உடை அணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்த வகையில் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டி வீசி "என் உடல், என் விருப்பம்" என பதிவிட்டுள்ளார்.

விரும்பிய ஆடையை அணியலாம்
நடிகை எல்னாஸ் நோரூசி பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஈரானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆட்சிக்கு எதிராக பெண்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துவதால் எங்குபார்த்தாலும் பதற்றமாகவே உள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். பெண்கள் உலகில் எங்கிருந்தாலும், அவள் விரும்பும் உடையை அணிய உரிமை வேண்டும், எப்போது அல்லது எங்கு வேண்டுமானாலும் அணியலாம் என்றார்.


Click it and Unblock the Notifications