பாங்காக்ல என்னம்மா மஜா பண்றாங்க.. இரண்டாம் குத்து ’பூம் பூம்’ வீடியோ பாடல் ரிலீஸ்.. செம குத்து!

சென்னை: இரண்டாம் குத்து படத்தின் அடுத்த ஹாட் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

வீராதி வீரா பாடலை தொடர்ந்து, இப்போ பாங்காக்கில் எடுத்த பூம் பூம் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

தீபாவளிக்கு தியேட்டரில் வெளியான இந்த படம் நல்லாவே கல்லா கட்டி வருகிறது. இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். மீனள் சாஹு, பிக் பாஸ் டேனி, ஷாலு ஷம்மு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சர்ச்சைகளை தாண்டி

சர்ச்சைகளை தாண்டி

ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகள் இரண்டாம் குத்து படத்திற்கு ஏற்பட்டன. ஆனால், நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஏகப்பட்ட தடைகளை தாண்டி அந்த படம் வெற்றிகரமாக ரிலீசாகி தியேட்டர்களில் முரட்டு குத்துக் குத்தி ஓடிக் கொண்டிருக்கிறது. பெரிய படங்களின் போட்டி ஏதும் இல்லாத நிலையில், இரண்டாம் குத்து வசூலை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருட்டுத்தனமாக

திருட்டுத்தனமாக

ஒடிடியில் படம் வெளியாகி இருந்தால், 2 மணி நேரத்தில் சுடச் சுட டெலிகிராமிலும், பைரசி தளங்களிலும் ஹெச்.டி. பிரின்ட் வெளியாகி இருக்கும். மூக்குத்தி அம்மன், சூரரைப் போற்று படம் போல, தியேட்டரில் வெளியான நிலையில், திருட்டுத் தனமாக பார்க்க முடியாமல், இளைஞர்களை தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

வீடியோ பாடல்கள்

வீடியோ பாடல்கள்

ஆன்லைன் ரசிகர்களுக்காக தொடர்ந்து ஹெச்.டி. வீடியோ பாடல்களை ரிலீஸ் பண்ணி அவர்களையும் தியேட்டரை நோக்கி அழைத்துச் செல்ல படக்குழு அதிரடி முயற்சிகளை செய்து வருகிறது. வீராதி வீரா பாட்டை தொடர்ந்து, தற்போது பாங்காக்கில் உருவான பூம் பூம் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

ஹாட்னஸ் அட்டகாசம்

ஹாட்னஸ் அட்டகாசம்

பலான வார்த்தைகளில் பாடல் வரிகள் இடம்பெற்று இருக்க, நாயகி சந்தோஷ் பி. ஜெயக்குமார் மற்றும் டேனியலை வச்சு செய்யும் பாடலாக பூம் பூம் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. பாங்காக் கடற்கரை மற்றும் பல இடங்களில் இந்த பாடலை உருவாக்கி உள்ளனர். பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

சீன் போட்டா நல்லா இருக்கும்

ஏற்கனவே ஒரு படு செக்ஸியான ஸ்னீக் பீக்கை வெளியிட்டு இளைஞர்களை டெம்ப்ட் செய்திருந்தனர். இப்போ வெளியாகி இருக்கும் வீடியோ பாடலை பார்த்த ரசிகர்கள் இன்னொரு ஸ்னீக் பீக் போடுங்க சந்தோஷ் என கமெண்ட் பக்கத்தில் வழிந்து வருகின்றனர். சீக்கிரம் வரும் பாஸ் வெயிட் பண்ணுங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X