சென்சார் ஏ சர்டிபிகேட்.. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது, சர்ச்சையை கிளப்பிய 'இரண்டாம் குத்து..'
சென்னை: சர்ச்சையை கிளப்பிய இரண்டாம் குத்து படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் அடுத்த பாகமாக, இரண்டாம் குத்து படம் உருவாகி இருக்கிறது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆபாசமாக இருந்ததால் ரசிகர்கள் அந்தப் படத்தின் இயக்குனரை கடுமையாக விளாசினர்.

பெரிய சர்ச்சை
இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரே அதில் ஹீரோவாக நடித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்தோஷும், நடிகர் டேனியலும் வாழைப்பழங்களை வைத்துக்கொண்டு கொடுத்த போஸ், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

ஆபாச வசனங்கள்
இந்நிலையில் வெளியான அந்தப் படத்தின் டீசரில் ஆபாச வசனங்கள் மோசமான காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதனால் கொதித்த ரசிகர்கள், பிட்டு படத்தை எடுத்துள்ளதாகக் கூறி சந்தோஷ் ஜெயகுமாரை கடுமையாக விளாசித் தள்ளினர். இயக்குனர் பாரதிராஜாவும் ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார்.

நல்ல குடும்பங்கள்
அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? என்று கேட்டிருந்தார்.

டிக் டிக் டிக் ஸ்டில்
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவுக்கு இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது ட்விட்டரில் பதில் தெரிவித்தார். கடந்த 1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான டிக் டிக் டிக் பட ஸ்டில்லை பதிவிட்டு, இந்தப் படத்தை பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

விமர்சித்து விட்டேன்
இதற்கு பலர் பாரதிராஜாவை எப்படி கேள்வி கேட்கலாம் என்று சந்தோஷை சாடியிருந்தனர். இதையடுத்து, அதற்கு வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்தார். அதில், அவசரத்தில் என்ன செய்கிறோம்? என்று தெரியாமல் பாரதிராஜாவை விமர்சித்து விட்டேன். நான் போட்ட பதிவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
சென்சார் ஏ சான்றிதழ்
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, இரண்டாம் குத்து படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதை சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சந்தோஷ் பி ஜெயகுமார். வரும் 14 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகைக்கு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











