twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன இப்படி பம்மிட்டாரு.. பாராதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ‘இரண்டாம் குத்து’ இயக்குநர் சந்தோஷ்!

    |

    சென்னை: இயக்குநர் பாரதிராஜாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் 'இரண்டாம் குத்து' பட இயக்குநரும் ஹீரோவுமான சந்தோஷ் பி. ஜெயக்குமார்.

    இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    ஆளுயர வாழைப்பழம், டீசரில் ஆண்குறி எனக் காட்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் சந்தோஷ்.

    இதை எப்படி திரையிட முடியும்? இரண்டாம் குத்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.. பைக் ரேசர் கோரிக்கை!இதை எப்படி திரையிட முடியும்? இரண்டாம் குத்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.. பைக் ரேசர் கோரிக்கை!

    இரண்டு பெரிய வாழைப்பழம்

    இரண்டு பெரிய வாழைப்பழம்

    இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என படு ஆபாசமாக தலைப்பு வைத்தது மட்டுமின்றி, ஆளுயர வாழைப் பழத்தை பிடித்துக் கொண்டு, ஆபாசமாக இயக்குநர் சந்தோஷ் மற்றும் பிக் பாஸ் டேனி கொடுத்த போஸ் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

    டீசரில் ‘அதை’ காட்டி

    டீசரில் ‘அதை’ காட்டி

    சாம பேய் கேள்வி பட்டிருக்கேன், இது படு காம பேயாக இருக்கேன்னு, பேய்க்கு செக்ஸி டிரெஸ்ஸை மாட்டி விட்டு, டீசரில் ஹீரோயின்களை பிகினி உடைகளிலும், உள்ளாடைகளுடனும் அலைய விட்டது மட்டுமின்றி, கடைசியாக ஆணுறுப்பையே காட்டியதால், அந்த டீசரை பார்த்த பலரும் இயக்குநர் சந்தோஷை காரித் துப்பத் தொடங்கினர்.

    பாரதிராஜா கண்டனம்

    பாரதிராஜா கண்டனம்

    "இரண்டாம் குத்து" படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?" என பாரதிராஜா கண்டன அறிக்கை வெளியிட்டார்.

    அப்போ கண்ணு கூசலையா

    அப்போ கண்ணு கூசலையா

    தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, டிக் டிக் டிக் படம் இயக்கும் போது உங்கள் கண்கள் கூசவில்லையா என நடிகர் கமலும் அந்த படத்தின் நாயகிகளும் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை போட்டு சந்தோஷ், பாராதிராஜவை கடுமையாக விமர்சித்தார்.

    மொதல்ல ஒரு நல்ல படம் எடு

    மொதல்ல ஒரு நல்ல படம் எடு

    பாரதிராஜவை விமர்சித்த இயக்குநர் சந்தோஷை பலரும், 16 வயதினிலே மாதிரி ஒரு நல்ல படத்தை எடுத்து காட்டு, அப்புறம் அவரை விமர்சிக்கலாம் என நெட்டிசன்கள் சந்தோஷை விளாச ஆரம்பித்தனர். பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பாராதிராஜாவிடம் மன்னிப்பு

    பாராதிராஜாவிடம் மன்னிப்பு

    இந்நிலையில், தற்போது இயக்குநர் பாராதிராஜாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கிறார் இரண்டாம் குத்து இயக்குநர் சந்தோஷ். அதில், பாராதிராஜாவின் எதிர்ப்பை பார்த்ததும் அந்த கனத்தின் வெப்பத்தில் ஒரு ட்வீட் போட்டு விட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்தது.

    பார்க்கும்படி

    பார்க்கும்படி

    தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனையில் 1 சதவீதமாக செய்து விடமாட்டோமா? என பணிபுரியும் இயக்குநர்கள் இங்கு பலர் இருக்கின்றனர். அவர் எப்போதுமே வழிகாட்டியாக இருக்கிறார். இருப்பார். இனி வரும் போஸ்டர்கள் அனைவரும் பார்க்கும் படி இருக்கும் என உறுதியளிக்கிறேன் என மன்னிப்பு கோரியுள்ளார்.

    English summary
    Irandam Kuththu director Santhosh P Jayakumar ask apologies to Director Bharathiraja for the recent clash.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X