அடங்க மாட்டார் போல தெரியுதே.. அடுத்த ஹாட் போஸ்டரை வெளியிட்ட ‘இரண்டாம் குத்து’ இயக்குநர்!

சென்னை: இரண்டாம் குத்து படத்தின் அடுத்த ஹாட் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் நாயகி மீனள் சாஹு மற்றும் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அந்த போட்டோவை ஷேர் செய்துள்ளனர்.

அந்த ஆபாச டீசர் 2 மில்லியன் வியூஸ் எடுத்த அறிவிப்புடன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

யார் காரணம்

யார் காரணம்

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை எடுக்கும் போதே, லேசான எதிர்ப்புகள் மட்டும் கிளம்பி, தியேட்டரில் கூட்டம் கூட்டமாக ஜோதி தரிசனம் பார்ப்பது போல ரசிகர்கள் ஹிட்டாக்கிய நிலையில், மூன்றாவது ஹாட் ஆட்டத்துக்கு ரெடியாகி விட்டார் இயக்குநர் சந்தோஷ். இதற்கெல்லாம் யார் காரணம்.

ஆபாச பட போஸ்டர்

ஆபாச பட போஸ்டர்

இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பெண்கள் உயர்நிலை பள்ளிக்கு எதிரே ஒட்டப்பட்டு இருந்த நிலையில், சில இளைஞர்கள் அதனை கிழித்து எறியும் காட்சிகள் செய்திகளாகின. மேலும், ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பலரும் பச்சையா பார்ன் மூவி எடுக்குறோம்னு சொல்லிட்டு எடுக்க வேண்டியது தானே என விளாசினர்.

பாரதிராஜாவுடன் பஞ்சாயத்து

பாரதிராஜாவுடன் பஞ்சாயத்து

இரண்டாம் குத்து படத்தின் கேவலமான விளம்பரங்களை பார்க்கவே கண் கூசுகிறது என சொன்ன இயக்குநர் பாரதிராஜவை, டிக் டிக் டிக் படம் எடுக்கும் போது கூசவில்லையா என கேட்டு அசிங்கப்படுத்தினார் சந்தோஷ். அதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் குட்டிய குட்டில் மண்டை வீங்கி மன்னிப்பும் கேட்டு விட்டார்.

20 லட்சம் பேர்

20 லட்சம் பேர்

இரண்டாம் குத்து பட டீசரில் உச்சகட்ட ஆபாச காட்சிகள் நிறைந்து உள்ள நிலையில், அதை டெலிட் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் ஒரு புறம் எழுந்தாலும், மறுபுறம் இளைஞர்கள் இம்முறையும் இந்த படத்தையும் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். 2 மில்லியன் வியூக்களை கடந்து வைரலாகி வருகிறது அந்த ஆபாச டீசர்.

ஒருத்தர் மேல ஒருத்தர்

ஒருத்தர் மேல ஒருத்தர்

இந்நிலையில், அதனை கொண்டாடும் வகையில், இரண்டாம் குத்து படத்தின் நாயகி மீனள் சாஹு மற்றும் சந்தோஷ் ட்விட்டர் பக்கத்தில் இரண்டாம் குத்து படத்தின் அடுத்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக் பாஸ் டேனியல் மீது மீனளும், மீனள் மேல சந்தோஷும் இருக்கிறார். இது தான் நீங்க திருந்திய லட்சணமா என ரசிகர்கள் திட்டித் தீர்க்க தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X