பாட்டுலயே ஆபாசம் இப்படி இருக்கே.. படத்துல எப்படி இருக்கும்.. இரண்டாம் குத்து ‘விர்ஜினிட்டி’ ரிலீஸ்!
சென்னை: தீபாவளிக்கு நல்ல ஒரு குடும்ப படமாக 'இரண்டாம் குத்து' படமும் தியேட்டரில் வெளியாகிறது.
இயக்குநர் சந்தோஷ் குமார் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு நடுவே ஏ சர்டிபிகேட் பெற்றுவிட்டது.
இந்நிலையில், தற்போது ஆபாசத்தின் உச்சமாக உருவாகி உள்ள இந்த படத்தின் 'விர்ஜினிட்டி' பாடல் லிரிக்ஸ் வீடியோ ரிலீசாகி உள்ளது.

தீபாவளி குத்து
தீபாவளிக்கு முன்பாகவே தியேட்டர்கள் திறக்கப்பட்டு, க்யூப் சிறப்பு தள்ளுபடியும் கிடைத்துள்ளதால், ஏகப்பட்ட புதுப்படங்கள் தியேட்டர் ரிலீசுக்கு முண்டியடித்து வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் குத்து படமும் தீபாவளிக்கு தியேட்டரில் வெளியாகிறது என்கிற அறிவிப்பை இயக்குநர் சந்தோஷ் சந்தோஷமாக அறிவித்துள்ளார்.

ரொம்ப ஆபாசமா இருக்கு
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திலேயே டபுள் மீனிங் வசனங்களும் ஆபாச காட்சிகளும் நிறைந்து இருந்தன. அந்த படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த பாகத்தை இன்னமும் தாராளமாக ஆபாசம் சேர்த்து இயக்குநர் சந்தோஷ் இயக்கி உள்ளார். படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசரை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கிழித்துத் தொங்கவிட மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

ஆணுறுப்பு
ஆபாச வசனங்கள், காட்சிகள் என நீண்ட டீசரின் நடுவே, ஆணுறுப்பு காட்சியையும் வைத்து மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிளப்பினார் அந்த படத்தின் இயக்குநர் சந்தோஷ். இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட சாட்டை அடி பதிவுக்கு பிறகு, போஸ்டர்கள் மற்றும் டீசர்களில் ஆபாசம் இருக்காது என மன்னிப்பும் கேட்டார்.

விர்ஜினிட்டி பாடல் ரிலீஸ்
இந்நிலையில், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, விர்ஜினிட்டி பாடல் லிரிக்கல் வீடியோவை புரமோஷனுக்காக வெளியிட்டுள்ளார் இயக்குநர் சந்தோஷ். 'விர்ஜினிட்டி போகப் போகுதே.. ரேகை எல்லாம் இனிமே அழியாதே என ஆரம்பமே ஆபாசமாக தொடங்கும் இந்த பாடல் முழுவதும் ஆபாச வரிகளையும், காட்சிகளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் போட்டியாளர்
சந்தோஷ் பி. ஜெயக்குமார், கரிஷ்மா கவுல், அக்ரித்தி சிங், மீனள் சாஹு, ஷாலு ஷம்மு, பிக் பாஸ் டேனியல், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.என். பிரசாத் மற்றும் தரண் குமார் இசையமைத்துள்ளனர். பிக் பாஸ் போட்டியாளரும் பாடகியுமான என்.எஸ்.கே ரம்யா பென்னி தயாளுடன் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











