இவ்ளோ கேவலமா இருந்தும் இத்தனை பேர் பார்த்திருக்காங்களே.. 'இரண்டாம் குத்து' டீசர் பலே சாதனை!
சென்னை: இரண்டாம் குத்து படத்தின் டீசர் சத்தமே இல்லாமல் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.
ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் காமெடி படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.
இவர் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக 'இரண்டாம் குத்து' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

ஆபாச காட்சிகள்
இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. டீசர் முழுக்கவுமே டபுள் மீனிங் டயலாக் மற்றும் ஆபாச காட்சிகள் நிறைந்திருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. திரைத்துறையை சேர்ந்தவர்களும் இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாரதிராஜாவுக்கு பதிலடி
இயக்குநர் பாரதிராஜா காமத்தை போதிக்கவா சினிமா எடுக்கிறோம் என இரண்டாம் குத்து பட டீசருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பாரதிராஜவின் கண்டனத்தால் கடுப்பான சந்தோஷ் ஜெயக்குமார், பதிலுக்கு அவரது படத்தை குறிப்பிட்டு பதிலுக்கு விளாசினார்.

சைலண்ட்டாக சாதனை
பின்னர் தான் இயக்குநர் பாரதிராஜாவிடம் அப்படி பேசியிருக்க கூடாது என வருத்தம் தெரிவித்தார். இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கேவலமாக உள்ளது என கடுமையாக விமர்சிக்கப்பட்ட இரண்டாம் குத்து டீசர் சத்தமே இல்லாமல் சைலண்ட்டாக ஒரு சாதனையை செய்துள்ளது.

30 லட்சம் வியூஸ்
அதாவது இரண்டாம் குத்து படத்தின் டீசர், இதுவரை 3 மில்லியன் அதாவது 30 லட்சம் வியூஸ்களை குவித்துள்ளது. மேலும் 53 ஆயிரம் லைக்குஸ்களையும் 16 ஆயிரம் டிஸ்லைக்குகளையும் குவித்துள்ளது.

இயக்குநர் பெருமிதம்
இரண்டாம் குத்து டீசர் படைத்துள்ள இந்த சாதனையை அந்தப் படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி ஜெயக்குமார், தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் மூன்றாவது போஸ்டருடன் பெருமையாக பகிர்ந்துள்ளார்.

எப்படி இவ்ளோ வியூ?
இதனை பார்த்த நெட்டிசன்கள், புரோ இவ்வளவு நல்லவங்க அங்க இருந்தும் எப்படி 3 மில்லியன் வியூ போச்சு? ஒருவேளை ஊருக்கு மட்டும் தான் உபதேசம் போல.. எப்படியோ உங்க படம் சக்ஸஸ்தான் புரோ என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











